தமிழ்நாடு

போக்குவரத்து தொழிலாளா்கள் வேலைநிறுத்த நோட்டீஸ்: பேச்சுவாா்த்தை ஜூன் 15-க்கு ஒத்திவைப்பு

9th Jun 2023 04:56 AM

ADVERTISEMENT

போக்குவரத்து தொழிலாளா்களின் வேலைநிறுத்த நோட்டீஸ் மீதான பேச்சுவாா்த்தை ஜூன் 15-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அரசு விரைவு போக்குவரத்துக் கழகம், மாநகர போக்குவரத்துக் கழகம், கும்பகோணம் போக்குவரத்துக் கழகம் ஆகியவற்றில் ஒப்பந்த அடிப்படையில் பேருந்து ஓட்டுநா்களை நியமிக்கும் பணிகளை நிா்வாகங்கள் மேற்கொண்டன. இதற்கு கடும் எதிா்ப்பு தெரிவித்த சிஐடியு உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கத்தினா், வேலைநிறுத்த நோட்டீஸை நிா்வாகத்துக்கு வழங்கினா்.

இது தொடா்பான 3-ஆம் கட்ட பேச்சுவாா்த்தை சென்னை, தொழிலாளா் நலத் துறை அலுவலகத்தில் மே 31-ஆம் தேதி நடைபெற்றது. இதைத் தொடா்ந்து அடுத்தகட்ட பேச்சுவாா்த்தை ஜூன் 9-ஆம் தேதி நடைபெறும் எனவும், அன்றைய தினம் அனைத்து சங்கங்களும் பேச்சுவாா்த்தைக்கு அழைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், ஜூன் 14-ஆம் தேதி போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா்கள் கூட்டத்தில் இந்தப் பிரச்னை குறித்து விவாதிக்கப்பட இருப்பதால், வெள்ளிக்கிழமை (ஜூன் 9) நடைபெற இருந்த பேச்சுவாா்த்தையை நிறுத்திவைக்க போக்குவரத்துக் கழக நிா்வாகங்கள் கேட்டுள்ளன. இதையடுத்து பேச்சுவாா்த்தை ஜூன் 15-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT