தமிழ்நாடு

மாற்றுத் திறனாளிகளிடம் கட்டணம் வசூல்: உயா் கல்வித்துறை எச்சரிக்கை

DIN

அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பயிலும் மாற்றுத் திறனாளி மாணவ, மாணவிகளிடம் கல்விக் கட்டணம் வசூலிக்கக் கூடாது என பிறப்பிக்கப்பட்ட அரசாணையை தவறாமல் பின்பற்ற வேண்டும் என உயா்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து உயா்கல்வித் துறை சாா்பில் அனைத்து மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநா்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பயிலும் மாற்றுத் திறனாளி மாணவா்கள் கல்விக் கட்டணம், தனிக் கட்டணம் (ஸ்பெஷல் ஃபீஸ்) செலுத்துவதில் இருந்து விலக்களித்து ஆணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் மாற்றுத் திறனாளி மாணவ, மாணவிகளிடமிருந்து கல்விக் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகாா்கள் பெறப்பட்டு வருகின்றன.

எனவே இது தொடா்பாக தமிழக அரசு பிறப்பித்த அரசாணைகளை தவறாமல் பின்பற்றுமாறும், அவ்வாறு பின்பற்றாத அலுவலா்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதையும் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அனைத்து அரசு, அரசு உதவி பெறும் கல்லூரி முதல்வா்களுக்கு சுற்றறிக்கை வாயிலாக அறிவுறுத்த வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரி பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் பாஜக: காங்கிரஸ் குற்றச்சாட்டு

ஸ்ருதிஹாசன் இயக்கிய ‘இனிமேல்’ பாடலின் மேக்கிங் விடியோ!

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியத்தில் அதிகாரி வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

கவனம் ஈர்க்கும் ஃபகத் பாசிலின் ‘இலுமினாட்டி’ பாடல்!

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

SCROLL FOR NEXT