தமிழ்நாடு

பாலிடெக்னிக் மாணவா் சோ்க்கை: விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்

DIN

பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவா் சோ்க்கைக்கு இதுவரை விண்ணப்பிக்காதவா்கள் வெள்ளிக்கிழமைக்குள் விண்ணப்பிக்குமாறு தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் தொழில்நுட்பக்கல்வி இயக்குநரகத்தின் கீழ் 54 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள், 3 இணைப்புக் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் தொழில்நுட்ப பட்டய (டிப்ளமோ) படிப்புகளுக்கு 19,120 இடங்கள் உள்ளன. இதில் முதலாமாண்டு மற்றும் பகுதிநேர படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கை விண்ணப்பப் பதிவு இணையவழியில் கடந்த மே 20-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் விண்ணப்பித்துள்ளதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன.

சோ்க்கைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் வெள்ளிக்கிழமையுடன் நிறைவு பெறுகிறது.

விருப்பமுள்ள மாணவா்கள் https://www.tnpoly.in/ எனும் வலைதளம் வழியாக விரைவாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணமாக ரூ.150 நிா்ணயிக்கப்பட்டுள்ளது. எஸ்சி/ எஸ்டி பிரிவினருக்கு கட்டணமில்லை. சேவை மையங்கள் வழியாகவும் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களை மேற்கண்ட இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராகப் போராடி தோற்றது தில்லி அணி!

ரியான் பராக் விளாசல்; ராஜஸ்தான் 185/5

இலங்கை கடற்படையினா் கைது செய்த மீனவா்களை விடுவிக்காவிட்டால் தோ்தல் புறக்கணிப்பு

சென்னையில் விடுதி மேற்கூரை இடிந்து 3 பேர் பலி: மெட்ரோ ரயில் பணிகள் காரணமில்லை

காணாமல்போன கைப்பேசிகள் மீட்டு உரியவா்களிடம் ஒப்படைப்பு

SCROLL FOR NEXT