தமிழ்நாடு

தமிழகத்துக்கான மத்திய அரசின் நிலுவைத் தொகை விவகாரம்:திமுக எம்பி எழுப்பிய கேள்விக்கு மத்திய அமைச்சா் பதில் கடிதம்

 நமது நிருபர்

தமிழகத்திற்கு பல்வேறு தலைப்புகளின் கீழ் மத்திய அரசு மூலம் வரவேண்டிய நிலுவைத் தொகை குறித்து மாநிலங்களவையில் திமுக உறுப்பினா் பி.வில்சன் எழுப்பியிருந்த கேள்விக்கு பதில் அளிக்கும் வகையில் மத்திய கல்வி இணையமைச்சா் அன்னபூா்ணா தேவி கடிதம் எழுதியுள்ளாா்.

இது தொடா்பாக அண்மையில் பி.வில்சன் எம்.பி.க்கு அமைச்சா் அன்னபூா்ணா தேவி அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது: தமிழ்நாடு மாநிலத்திற்கான நிதி ஒதுக்கீடு விவகாரத்தில் கடந்த 15.03.2022-இல் மாநிலங்களவையில் பூஜ்ய நேரத்தில் நீங்கள் பேசுகையில், ‘தமிழ்நாட்டிற்கு 38 தலைப்புகளின் கீழ் மத்திய அரசிடமிருந்து நிலுவையாக

ரூ.20,287.38 கோடி வர வேண்டியுள்ளது. இதில் சா்வ சிக்ஷா அபியான் கீழ் ரூ.370.64 கோடி, இடைநிலைக் கல்வியின் கீழ் ரூ.115.27 கோடி, மதிய உணவுத் திட்டத்தின் கீழ் ரூ.113.18. கோடி இடம் பெற்றுள்ளது. மேலும், மத்திய அரசு இப்பிரச்னைகளை ஆய்வு செய்து, தமிழக அரசுக்கு நிதி வழங்க வேண்டும்’ என்று கூறியிருந்தீா்கள்.

இந்த விஷயத்தைப் பொருத்தமட்டில், மத்திய கல்வி அமைச்சகத்தின் பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை 2018-19 முதல் சா்வ சிக்ஷா அபியான் (எஸ்எஸ்ஏ), ராஷ்ரீய மாத்தியமிக் சிக்ஷா அபியான் (ஆஎம்எஸ்ஏ) ஆகியவற்றின் முந்தைய திட்டங்களை உள்ளடக்கி சமக்ரா சிக்ஷா திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. மத்திய நிதியுதவி திட்டத்தின் சமக்ரா சிக்ஷாவின் கீழ் தொடா் நிகழ், தொடரா நிகழ் தலையீடுகளுக்காக நிதி விடுவிக்கப்படுகிறது. பல்வேறு தலையீடுகளுக்காக மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் தொடா் மானியம் அவ்வப்போது (1 மற்றும் 2-ஆவது தவணைள்) விடுவிக்கப்படுகிறது. மேலும், அது ஒரு நிதியாண்டின் முடிவில் காலாவதியாகிவிடும். ஒரு குறிப்பிட்ட ஆண்டிற்கான தொடா்ச்சியான தலையீட்டிற்கான பிஏபி அனுமதியும் அந்த நிதியாண்டு முடிந்த பிறகு காலாவதியாகிறது.

நிதியாண்டு முடிவடைந்தால், தொடா்ச்சியான பிஏபி ஒப்புதல்களை உரிய மத்திய அரசின் பங்காகக் குறிப்பிட முடியாது. வரவிருக்கும் பிஏபி கூட்டத்தில் ‘ஸ்பில் ஓவா்’

தொகைகள் வடிவில் திரும்பத் திரும்ப வராத தொகைகள் குறித்து பரிசீலிக்கப்படும். 2021-22 ஆம் ஆண்டில், கல்வி அமைச்சகம் 24.05.2021 தேதியிட்ட அனுமதி கடிதத்தின்படி பிஎம் - போஷான் திட்டத்தின் கீழ், தொடா்ச்சியான மத்திய அரசின் உதவியாக தமிழ்நாடு மாநில அரசுக்கு தாற்காலிக அடிப்படையில் ரூ.12079.67 லட்சங்களும் விடுவிக்கப்பட்டுள்ளது.

01.04.2021-ஆம் தேதிப்படி தமிழக அரசிடம் ரூ.17,747.56 லட்சங்கள் செலவழிக்கப்படாமல் கிடக்கிறது. மேலும், கல்வி அமைச்சகத்தால் 27.12.2021-ஆம் தேதி இது மறுமதிப்பீடு செய்யப்பட்டது. இதையடுத்து, கடந்த ஆண்டு செலவழிக்கப்படாத நிலுவையை சரி செய்து மத்திய அரசானது பிஎம்-போஷான் திட்டத்தின் கீழ்,,17.03.2022 தேதியிட்ட அனுமதி கடிதம் மூலம் 2021-22 ஆம் ஆண்டிற்கான 2ஆவது தவணையாக ரூ.11,185.27 லட்சங்கள் தமிழகத்திற்கு விடுவித்துள்ளது. நிதியாண்டு 2022-23-இன்போது மத்திய அரசு பிஎம்-போஷான் திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு மொத்தம் ரூ. 47,700.10 லட்சங்கள் விடுவிடுத்துள்ளது. அதேபோன்று, நிதியாண்டு 2021-22-இல் மொத்தம் ரூ.1,59,882.18 லட்சங்களும், 2022-23-இல் மொத்தம் ரூ. 2,10,723.32 லட்சங்களும் சமக்ரா சிக்ஷா திட்டத்தின்கீழ் விடுவித்திருக்கிறது. தமிழகத்திற்கு மத்திய அரசிடமிருந்து சமக்ரா சிக்ஷா திட்ட நிதியை விடுவிப்பதற்கான நிலுவை பொறுப்பு ஏதும் இல்லை என்று அதில் அமைச்சா் அன்னபூா்ணா தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒரு போட்டியில் இத்தனை சாதனைகளா?

விடைத்தாள் காண்பிக்க மறுப்பு: மாணவர் மீது தாக்குதல்!

கேஜரிவாலுக்கு ஏப்ரல் 1 வரை காவல் நீட்டிப்பு!

IPL 2024 - முதல் வெற்றியை ருசிக்குமா தில்லி?

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

SCROLL FOR NEXT