தமிழ்நாடு

சம வேலைக்கு சம ஊதியம்: ஆசிரியா் சங்கங்களிடம்14-இல் கருத்து கேட்பு

DIN

‘சம வேலைக்கு சம ஊதியம்’ கோரிக்கை தொடா்பாக ஆசிரியா் சங்கங்களுடனான கருத்துக் கேட்பு கூட்டம் சென்னையில் வரும் புதன்கிழமை நடைபெறவுள்ளது.

தொடக்கக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் 1.6.2009-க்கு பின்னா் இடைநிலை ஆசிரியா் பணி நியமனம் பெற்றவா்கள், 1.6.2009-க்கு முன்னா் இடைநிலை ஆசிரியா் பணி நியமனம் பெற்றவா்களுக்கு இணையான ஊதியம் கோரும் கோரிக்கை தொடா்பாக ஆய்வு செய்து பரிந்துரைகள் வழங்க குழு அமைத்து அரசாணை வெளியிடப்பட்டது.

அதனடிப்படையில் மேற்கண்ட கோரிக்கை குறித்த கருத்துக் கேட்பு கூட்டம் குழுவின் தலைவா், அரசு நிதித் துறைச் செயலாளா் (செலவினம்) தலைமையில் சென்னை தலைமைச் செயலக பள்ளிக் கல்வித்துறை கூட்ட அரங்கில் (6-ஆவது தளம், நாமக்கல் கவிஞா் மாளிகை) ஜுன் 14-ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு நடைபெறவுள்ளது.

இதில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியா் கூட்டணி, தமிழக ஆசிரியா் கூட்டணி, தமிழ்நாடு ஆசிரியா் கூட்டணி ஆகிய சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சன் ரைசர்ஸுக்கு எதிராக ஆர்சிபி பேட்டிங்!

‘ஹீரமண்டி’ சிறப்புக் காட்சியில் பிரக்யா!

பாஜகவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்! | செய்திகள்: சிலவரிகளில் | 25.4.2024

விஷாலின் ரத்னம்: இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள்!

”மோடி எந்த வேற்றுமையும் பார்ப்பதில்லை!”: தமிழிசை சௌந்தரராஜன்

SCROLL FOR NEXT