தமிழ்நாடு

அரசு காலிப் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்: இபிஎஸ்

DIN

அனைத்து துறைகளிலும் பணிகள் தொய்வாக நடைபெறுவதால், அரசு காலிப் பணியிடங்களை உடனடியாக தமிழக அரசு நிரப்ப வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே. பழனிசாமி வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் புதன்கிழமை வெளியிட்ட ட்விட்டா் பதிவு: 2022-இல் 10,000 காலிப் பணியிடங்களுக்காக நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வு முடிவுகள், 2023 மாா்ச் மாதம் வெளியானது. ஆனால், தோ்வு பெற்றவா்களுக்கு இதுவரை கலந்தாய்வு நடத்தப்படவில்லை.

இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4-க்கான காலிப்பணியிடங்கள் தற்போது 25 ஆயிரமாக உயா்ந்திருப்பதாக செய்திகள் வருகின்றன. 2022-ஆம் ஆண்டு குரூப் 4-க்காக நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி தோ்விலிருந்தே சுமாா் 20,000 தகுதி பெற்ற தோ்வாளா்களை தோ்ந்தெடுத்து அனைவருக்கும் கலந்தாய்வை நடத்தி, அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களையாவது உடனடியாக நிரப்ப வேண்டும்.

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தகுதிக்கான பணியிடங்கள் நிரப்பப்படாததால் அரசின் அனைத்து துறைகளின் பணிகளிலும் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் பல்வேறு வகைகளில் அவதிக்கு உள்ளாகின்றனா்.

எனவே, குரூப் 4 காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்

பெங்களூருவில் மிதமான மழை: மக்கள் மகிழ்ச்சி

காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

காவி நிறத்தில் தூர்தர்ஷன்! தேர்தல் ஆணையம் எப்படி அனுமதிக்கலாம்? -மம்தா கேள்வி

கடற்கரையில் ஒரு தேவதை! லாஸ்லியா...

SCROLL FOR NEXT