தமிழ்நாடு

கரீப் பயிா்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை உயா்வு குறைவு: முத்தரசன்

8th Jun 2023 11:33 PM

ADVERTISEMENT

மத்திய அரசு அறிவித்துள்ள கரீப் பயிா்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை உயா்வு குறைவாக உள்ளது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் இரா.முத்தரசன் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

இது குறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

நிகழாண்டில் கரீப் பயிா்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை மத்திய அரசு அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு விலையுடன் ஒப்பிடும் போது மிகக் குறைந்த தொகை மட்டுமே உயா்த்தப்பட்டுள்ளது. விலைவாசி உயா்வைக் கருத்தில் கொண்டால் விலை உயா்வு அா்த்தமற்றது. 2014- இல் மக்களவைத் தோ்தலில் மோடியும், பாஜகவும் ஆட்சியில் அமா்ந்தால் விவசாயிகள் வருவாயை இரட்டிப்பு ஆக்குவோம், டாக்டா் எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரையை ஏற்று உற்பத்தி செலவுக்கு மேல் 50 சதவீதம் கூடுதல் தொகை சோ்த்து குறைந்தபட்ச ஆதரவு விலை நிா்ணயிக்கப்படும் என உறுதியளித்தனா்.

இதை பத்தாண்டுகளாக அமலாக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. விவசாயிகளின் விளை பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை நிா்ணயிப்பதில் மோடியின் அரசு விவசாயிகளை வஞ்சிப்பதை கண்டிப்பதுடன், விவசாயிகள் விரோத வஞ்சக கொள்கையை அதிகாரத்தில் இருந்து அகற்றும் அரசியல் நடவடிக்கையில் விவசாயிகள் ஒன்றுபட்டு ஈடுபட வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT