தமிழ்நாடு

மேட்டூர் அணை நீர்வரத்து அதிகரிப்பு!

8th Jun 2023 08:16 AM

ADVERTISEMENT


மேட்டூர் அணைக்கு  வரும் நீரின் அளவு வினாடிக்கு 1178கன அடியாக அதிகரித்துள்ளது.

காவிரியின் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் லேசான மழை   காரணமாக இன்று காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 715கன  அடியிலிருந்து 1178கன அடியாக அதிகரித்துள்ளது.

அணையில் இருந்து குடிநீருக்கு திறக்கப்படும் நீரின் அளவை விட அணைக்கு வரும் நீரின் அளவு குறைவாக இருப்பதால் இன்று காலை மேட்டூர் அணை நீர்மட்டம் 103.63  அடியிலிருந்து 103.59அடியாக குறைந்துள்ளது.

அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1500கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 69.57 டிஎம்சியாக உள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT