தமிழ்நாடு

ஜூன் 10, 11-ல் வள்ளலார் குறித்த பன்னாட்டு கருத்தரங்கு!

8th Jun 2023 12:18 PM

ADVERTISEMENT

 

சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தத்துவத்துறையும், வடலூர் வள்ளலார் கல்விப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து வள்ளலார்-200 என்ற தலைப்பில் இரண்டு நாட்கள் பன்னாட்டு கருத்தரங்கை ஜூன் 10 மற்றும் 11  ஆகிய தேதிகளில் நடத்த உள்ளது.

இக்கருத்தரங்கத்தின் தொடக்க விழா  ஜுன் 10ஆம் தேதி காலை 8.45 மணிக்கு அண்ணாமலைப் பல்கலைக்கழக சாஸ்திரி அரங்கில் நடைபெறுகிறது. கலைப்புல முதல்வர் கே.விஜயராணி தலைமை வகித்து பேசுகிறார்.

கருத்தரங்க இயக்குநர்  ஜெ.திருமால் வரவேற்று பேசுகிறார்.  பல்கலைக்கழக பதிவாளர் (பொ) முனைவர் இரா.சிங்காரவேல் கருத்தரங்கை தொடங்கி வைத்து உரையாற்றுகிறார்.

ADVERTISEMENT

கோவை சிவப்பிரகாச சுவாமிகளின் கருத்துரையும், மலேசியா மருத்துவர் செல்வமாதரசி சிறப்புரையும் நடைபெறுகிறது.  கலைப்புல முன்னாள் முதல்வர் சி. இராஜேந்திரன், பெண்ணாடம் வள்ளலார் அறநிலையம்  முத்துஜோதி ஆகியோர்  வாழ்த்துரை வழங்குகின்றனர்.  இந்த இரண்டு நாட்கள் கருத்தரங்கில் 100க்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகள் ஆறு அமர்வுகளில் விவாதிக்கப்பட உள்ளது.

இதனை தொடர்ந்து ஜூன் 11-ஆம் தேதி மாலை பன்னாட்டு கருத்தரங்க நிறைவு விழா நடைபெறுகிது. விழாவில் பல்கலைக்கழக துணைவேந்தர் ராம.கதிரேசன் தலைமையுரையாற்றி ஆராய்ச்சிக் கட்டுரை தொகுப்பை வெளியிடுகிறார்கள்.

மேலும், தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் சிறப்புரையாற்றுகிறார். தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வி. திருவள்ளுவன் பன்னாட்டுக் கருத்தரங்க நிறைவுரையாற்றுகிறார்.  

வடலூர் தலைமை சங்க தலைவர்  அருள் நாகலிங்கம் மற்றும் மலேசியா சன்மார்க்க சங்கத்தின் ஆர்.வி.கிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்க உள்ளனர்.

இக்கருத்தரங்கில் சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியா மற்றும் இலங்கையில் இருந்து ஆய்வாளர்களும் வள்ளலார் அருளார்களும் பங்கேற்கின்றனர்.

பன்னாட்டு கருத்தரங்க ஏற்பாடுகளை தத்துவத்துறைத் தலைவர் ஜே.திருமால், மற்றும் உதவி பேராசிரியர்கள் எம்.பரணி, எஸ். தணிகைவேலன், கே. ரவீந்திரன், சி.நீலாதேவி மற்றும் வள்ளலார் கல்விப் பயிற்சி ஆராய்ச்சி நிறுவன நிர்வாகிகள் பாண்டுரங்கன்,  சுரேஷ், ஜோதி மற்றும்  நமச்சிவாயம் ஆகியோர் செய்து வருகின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT