தமிழ்நாடு

பட்டமளிப்பு விழா தாமதமாக ஆளுநரே காரணம்: அமைச்சர் பொன்முடி

8th Jun 2023 01:09 PM

ADVERTISEMENT

 

பட்டமளிப்பு விழாவை ஆளுநர் வேண்டுமென்ற காலதாமதம் செய்கிறார் என உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி குற்றம் சாட்டியுள்ளார். 

பட்டமளிப்பு விழா நடத்த தாமதமாவது ஏன் என்பது குறித்து அமைச்சர் பொன்முடி விளக்கமளித்துள்ளார். சென்னையில் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், 

பட்டமளிப்பு விழாவுக்கு மத்திய அமைச்சர்களை அழைத்து பட்டமளிப்பு விழாவை நடத்த வேண்டும் எனக் கோருவதால் தாமதமாகிறது. பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்ற 9.29 லட்சம் மாணவர்கள் பட்டமளிப்புக்காக காத்திருக்கின்றனர். 

ADVERTISEMENT

ஆளுநரின் தலையீட்டால் பட்டமளிப்பு விழா நடத்துவதில் தாமதம் ஏற்படுகிறது. தற்போது அண்ணா பல்கலைக் கழகத்தில் மட்டுமே பட்டமளிப்பு விழா நடைபெற்றுள்ளது.

எப்போது வேண்டுமானாலும் பட்டமளிப்பு விழாவை நடத்த தமிழக அரசு தயாராகவுள்ளது. பட்டமளிப்பு விழா குறித்து ஆளுநர் கேட்பது கூட இல்லை என அமைச்சர் குறிப்பிட்டார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT