தமிழ்நாடு

நாயை படிக்கட்டில் இறங்கவிடாமல் தடுத்த பூனை: வைரலாகும் ருசிகர விடியோ!

8th Jun 2023 01:11 PM

ADVERTISEMENT


புதுச்சேரி: புதுச்சேரி அடுத்த வம்புபட்டு கிராமத்தில் படிக்கட்டில் நாயை இறங்கவிடாமல் பூனை தடுக்கும் ருசிகரமான விடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

புதுச்சேரி அடுத்த வம்புபட்டு கிராமத்தில் வசித்து வருபவர் விவசாயியான ஞானவேல். இவர் வீட்டில் செல்ல பிராணிகளாக நாய் மற்றும் பூனை வளர்த்து வருகிறார்.

புதன்கிழமை மாலை அவருடைய வீட்டு மொட்டை மாடிக்கு நாய் சென்றுள்ளது. பின்னர் படிக்கட்டு வழியாக நாய் இறங்கும் போது, கீழே இறங்க விடாமல் பூனை தடுத்துள்ளது. சுமார் பத்து நிமிடங்களுக்கு மேலாக இந்த போராட்டம் நடைபெற்றுள்ளது.

இதனை விவசாயியான ஞானவேல் விடியோ எடுத்துள்ளார்.

ADVERTISEMENT

பின்னர், அதனை சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார். இந்த ருசிகரமான விடியோ சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT