தமிழ்நாடு

ஆழியாறு அணை: காட்டு யானைகள் முகாம்! பயணிகளுக்கு வனத் துறை எச்சரிக்கை!!

8th Jun 2023 12:11 PM

ADVERTISEMENT

 

கோவை: ஆழியாறு அணை பகுதியில் காட்டு யானைக் கூட்டங்கள் முகாம் - சுற்றுலா பயணிகள் சாலையில் செல்லும்போது பாதுகாப்பாக செல்லுமாறு வனத்துறையினர் அறிவுறுத்தல்.

ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனச்சரக மலை அடிவாரங்களில் காட்டு மாடு, புலி, சிறுத்தை, செந்நாய், கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் அதிக நடமட்டம் உள்ள பகுதியாகும்.

மலையடிவாரங்களில் வனத்தை விட்டு வெளியேறும் யானைக் கூட்டங்கள் தனியாருக்கு சொந்தமான தென்னந்தோப்புக்கள், விவசாய நிலப் பகுதிகளில் உணவுகள் தேடியும் நீர்நிலைப் பகுதிகளில் அதிக அளவில் நடமாட்டம் உள்ளது.

ADVERTISEMENT

வனத் துறை உயர்  அதிகாரிகள் உத்தரவின் பேரில் வனத் துறையினர் மற்றும் வேட்டை திறப்பு காவலர்கள் சுழற்சி முறையில் யானை நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.

இதை அடுத்து காடம் பாறை, வாண்டல் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் இருந்து ஆழியாறு அணைக்கு வந்த காட்டு யானைகள் பகல் மற்றும் மாலை நேரங்களில் ஆழியாறு அணை பின்புறம் உள்ள வன பகுதியிலிருந்து வெளியேறிய யானைக் கூட்டங்கள், முகாமிட்டுள்ளதால் வால்பாறை செல்லும் சுற்றுலா பயணிகள், வனப்பகுதிகள் ஒட்டி வாகனங்களை நிறுத்தக்கூடாது எனவும் பாதுகாப்பாக செல்லுமாறும் வனத்துறையினர் அறிவுறித்துள்ளனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT