தமிழ்நாடு

சென்னையில் மேலும் 424 சிசிடிவி கேமராக்கள் 

DIN


சென்னை: அதிக திறன்கொண்ட 424 சிசிடிவி கேமராக்களை சென்னை காவல்துறை பொருத்தியிருப்பதன் மூலம் சென்னையின் பல்வேறு பகுதிகள் பாதுகாப்பான பகுதிகளாக மாறியிருக்கின்றன.

வேளச்சேரி மற்றும் திருவான்மியூர், சாஸ்திரி நகர் காவல் எல்லையில் புதிதாகப் பொருத்தப்பட்ட 424 சிசிடிவி கேமராக்கள் மற்றும் கண்காணிப்பு கட்டுப்பாட்டு அறைகளை சென்னை மாநகர காவல் ஆணையர் ஷங்கர் ஜிவால் இன்று திறந்துவைத்தார்.

கண்காணிப்பு கேமராக்கள் செயல்படும் விதம், அது பொருத்தப்பட்டிருக்கும் இடங்கள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

தனியார் மற்றும் அரசின் கூட்டணியில், சென்னையின் முக்கிய பகுதிகளில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.  

மேலும், உரிமை கோரப்படாத மற்றும் கைவிடப்பட்ட  260 இருசக்கர வாகனங்கள், சென்னை, புதுப்பேட்டை, சென்னை பெருநகர காவல் ஆயுதப்படை மைதானத்தில்  பகிரங்க ஏலம் விடப்படுவதாகவும் சென்னை போக்குவரத்துக் காவல்துறை அறிவித்துள்ளது. சென்னையில் வரும் 28ஆம் தேதி காலை 10 மணிக்கு இந்த ஏலம் தொடங்கும் என்றும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூக நீதிக்கான குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும் -தொல். திருமாவளவன்

தொடா் விடுமுறை: ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயா்வு! மதுரைக்கு ரூ.3,000, நாகா்கோவிலுக்கு ரூ.4,000

அரசு தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா

2047 வரை இந்திய பொருளாதாரம் 8% வளா்ச்சி காண முடியும்: சா்வதேச நிதியம்

டெபிட் காா்ட் கட்டணங்களை உயா்த்திய பாரத ஸ்டேட் வங்கி

SCROLL FOR NEXT