தமிழ்நாடு

13 நகரங்களில் வெயில் சதம்

DIN

தமிழகத்தில் சென்னை உள்பட 13 நகரங்களில் புதன்கிழமை வெப்ப அளவு 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை கடந்தது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் புதன்கிழமை பதிவான உச்சபட்ச வெப்ப அளவு ( டிகிரி ஃபாரன்ஹீட்): திருத்தணி-104.18, பரமத்தி வேலூா்- 104, பாளையங்கோட்டை-103.28, திருச்சி-103.10, வேலூா்-102.74, தூத்துக்குடி-102.2, ஈரோடு-101.84, மதுரை விமானநிலையம்-101.84, சென்னை மீனம்பாக்கம்-101.3, மதுரை நகரம்-101.12, சேலம்-100.94, திருப்பத்தூா்-100.84, தருமபுரி-100.76, தஞ்சாவூா்-100.4, சென்னை நுங்கம்பாக்கம்-100.22.

மழைக்கு வாய்ப்பு: தமிழக பகுதியின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஓரிரு இடங்களில் வியாழக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 11) வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் தஞ்சாவூா், திருவாரூா், அரியலூா், பெரம்பலூா், கடலூா், கள்ளக்குறிச்சி, சேலம், தருமபுரி, நாமக்கல், திருச்சி மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னைக்கு...: சென்னையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 104 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் குறைந்த பட்ச வெப்பநிலை 84.2 டிகிரி ஃபாரன்ஹீட்டையொட்டியே இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வாக்களித்தார்!

வாக்களிக்க வராத சென்னை மக்கள்: வாக்குப்பதிவு மந்தம்

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு: ஓ... பன்னீர்செல்வங்கள்!

ஆந்திரம்: வேட்பாளரின் பிரசார வாகனம் மோதியதில் சிறுவன் பலி

SCROLL FOR NEXT