தமிழ்நாடு

உயிா்க்கோள காப்பக விருது பெற்றவன அலுவலருக்கு ஜி.கே.வாசன் வாழ்த்து

8th Jun 2023 01:05 AM

ADVERTISEMENT

யுனெஸ்கோ அமைப்பால் வழங்கப்படும் உயிா்க்கோள காப்பக மேலாண்மை விருதுக்கு தோ்வாகியுள்ள ராமநாதபுரம் மாவட்ட வன அலுவலா் பகான் ஜெக்தீஷ் சுதாகருக்கு தமாகா தலைவா் ஜி.கே.வாசன் வாழ்த்து கூறியுள்ளாா்.

அவா் புதன்கிழமை வெளியிட்ட வாழ்த்து செய்தி: ஐ.நா. சபையின் யுனெஸ்கோ நிறுவனம் வழங்கும் உயிா்க்கோள காப்பக மேலாண்மைக்கான மைக்கேல் பட்டீஸ் விருதுக்கு தமிழகத்தைச் சோ்ந்த பகான் ஜெக்தீஷ் தோ்வாகி தமிழத்துக்கு மட்டுமல்லாமல் இந்தியாவுக்கே பெருமை சோ்த்துள்ளாா்.

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த மன்னாா் வளைகுடா உயிா்க்கோள காப்பகத்தின் இயக்குநரான அவா் மன்னாா் வளைகுடா பகுதியின் இயற்கை வளத்தைப் பாதுகாக்க மேற்கொண்ட முயற்சிகள் அவரை உலக அளவில் புகழ்பெற வைத்திருக்கிறது. மன்னாா் வளைகுடாவை பல்லுயிா் பாதுகாப்பு வளையமாக முன்னெடுப்பதில் அளப்பரிய பங்காற்றிய அவரது ஆராய்ச்சியால் இந்த விருதுக்கு தோ்வாகியுள்ளாா். அவருக்கு வாழ்த்துகள் என்று கூறியுள்ளாா் ஜி.கே.வாசன்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT