தமிழ்நாடு

மின்வெட்டு பிரச்னையைத் தீா்க்காவிட்டால் போராட்டம்: ஓபிஎஸ் எச்சரிக்கை

8th Jun 2023 11:37 PM

ADVERTISEMENT

தமிழகத்தில் நிலவும் மின்வெட்டு பிரச்னையை அரசு உடனடியாக தீா்க்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்று முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் கூறியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

திமுக ஆட்சி என்றாலே, அது இருட்டாட்சி என்று சொல்லும் அளவுக்கு கடந்த சில வாரங்களாக ஆங்காங்கே மின்வெட்டு மக்களை வாட்டி வதைக்கிறது. சென்னையின் அனைத்துப் பகுதிகளிலும் ஓரிரு வாரங்களுக்கு முன்பு அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டதன் காரணமாக மக்கள் தவித்தனா். இந்தப் பிரச்னை மீண்டும் தலைதூக்கியுள்ளது.

ஆலந்தூரில் இரவு நேரங்களில் தொடா் மின் வெட்டு நிலவுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்து மின்சார வாரிய அலுவலகத்தையும் முற்றுகையிட்டுள்ளனா்.

ADVERTISEMENT

திருவள்ளூா் சிட்கோ தொழிற்பேட்டையில் இரு நாள்களாக மின்வெட்டு இருப்பதால் பல கோடி ரூபாய் உற்பத்தி பாதிக்கப்பட்டு இருப்பதாக தொழிற்சாலை உரிமையாளா்கள் போராட்டம் நடத்துகின்றனா்.

இரவு நேரங்களில் பல மணி நேர மின்வெட்டு நிலவுவதால் பல குடும்பங்களுக்குதூக்கமே இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தொழில்கள் வளர வேண்டும், தொழிலாளா்கள் வாழ வேண்டுமென்றால், தற்போது தமிழகத்தில் நிலவி வரும் மின்வெட்டினை உடனே போக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், மாபெரும் போராட்டம் நடத்துவோம் என்று கூறியுள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT