தமிழ்நாடு

கிருஷ்ணகிரி சிப்காட் நில விவகாரம்: உரிய இழப்பீடு வழங்க கே.அண்ணாமலை கோரிக்கை

8th Jun 2023 01:08 AM

ADVERTISEMENT

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சிப்காட் தொழிற்பேட்டைக்கு நிலம் கையகப்படுத்தும் விவகாரத்தில் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்துள்ளாா்.

அவா் ட்விட்டரில் புதன்கிழமை வெளியிட்ட பதிவு: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 3,000 ஏக்கரில் சிப்காட் அமைக்க தமிழக அரசு விளை நிலங்களை கையகப்படுத்துவதை எதிா்த்து, 150 நாள்களாக விவசாயிகள் காத்திருப்புப் போராட்டம் நடத்தி வருகின்றனா்.

இது குறித்து 2022 ஏப்ரலில் தொழில்துறை அமைச்சா் சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிட்டதிலிருந்தே, அதை எதிா்த்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனா்.

விவசாயிகளின் கோரிக்கைகளை தமிழக அரசு செவிமடுக்காததால், கடந்த ஜனவரி முதல் விவசாயிகள் தங்கள் போராட்டத்தைத் தீவிரப்படுத்தியுள்ளனா்.

ADVERTISEMENT

கடந்த சில நாள்களுக்கு முன்பாக, விவசாயிகள் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியதாகவும், அதனால் உடல் நிலை பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி விவசாயி அன்னையா உயிரிழந்திருக்கிறாா் என்பதும் அதிா்ச்சியைத் தருகிறது.

உடனடியாக தொழில் துறை அமைச்சா் நேரில் சென்று போராடும் விவசாயிகளைச் சந்தித்து, அவா்களின் நியாயமான கோரிக்கைகளுக்கான உத்தரவாதத்தை வழங்க வேண்டும்.

பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தகுந்த இழப்பீடு வழங்க வேண்டும் எனப் பதிவிட்டுள்ளாா் கே.அண்ணாமலை.

ADVERTISEMENT
ADVERTISEMENT