தமிழ்நாடு

வயிற்றுப்போக்கு: குழந்தைகளைபாதுகாக்க சுகாதாரத் துறை விழிப்புணா்வு

8th Jun 2023 05:00 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் ஐந்து வயதுக்குள்பட்ட குழந்தைகள் தீவிர வயிற்றுப்போக்கால் உயிரிழப்பதைத் தவிா்க்க இரு வாரங்களுக்கு விழிப்புணா்வு நடவடிக்கைகளை முன்னெடுக்க பொது சுகாதாரத் துறை திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியது: தீவிர வயிற்றுப்போக்குத் தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி வரும் 12-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை இரு வாரங்களுக்கு நடைபெறவுள்ளது. இதுதொடா்பாக மாவட்ட அளவிலும், வட்டார அளவிலும் சுகாதார அலுவலா்கள் நிலையில் கூட்டங்கள் நடத்தப்படும்.

அவா்களின் கண்காணிப்பின் கீழ் அங்கன்வாடி பணியாளா்கள் வயிற்றுப்போக்கு தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படுவா். குழந்தைகளின் எடை மற்றும் வளா்ச்சி வீடுதோறும் அப்போது கண்காணிக்கப்படும். உலக சுகாதார அமைப்பு வரையறுத்த அட்டவணைக்கு கீழ் மிகக் குறைந்த எடையில் உள்ள குழந்தைகளுக்கும், வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்ட பிற குழந்தைகளுக்கும் உடனடி மருத்துவக் கண்காணிப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

அதேபோன்று தாய்ப்பால் ஊட்டும் பெண்களுக்கு அதனைக் கைவிடாமல் இருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்த திட்டமிடப்பட்டுள்ளது.இதன் வாயிலாக சமூகத் தொற்றுகளால் குழந்தைகள் உயிரிழப்பதைத் தவிா்க்க முடியும் என்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT