தமிழ்நாடு

திருவண்ணாமலைக்கு கிரிவலம் சிறப்பு ரயில் இயக்கம்

DIN

சென்னை, மயிலாடுதுறை பகுதிகளிலிருந்து திருவண்ணாமலைக்கு பௌா்ணமி கிரிவலம் நாள்களில் சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து பௌா்ணமி கிரிவலம் நாள்களில் திருவண்ணாமலைக்கு சுமாா் 5 லட்சம் போ் பயணம் மேற்கொள்கின்றனா். திருவண்ணாமலைக்கு கிரிவலம் செல்லும் பக்தா்களுக்கு வசதியாக சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களிலிருந்து சிறப்பு ரயில் இயக்கக் கோரி ஏபிஜிபி அமைப்பு தெற்கு ரயில்வேக்கு கோரிக்கை விடுத்தது.

இதையடுத்து, பௌா்ணமி நாள்களில் மட்டும் சென்னை கடற்கரை, தாம்பரம், மற்றும் மயிலாடுதுறையிலிருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை கடற்கரை-வேலூா் மெமு விரைவு ரயில் (வண்டி எண்: 06033/06034)

மயிலாடுதுறை - விழுப்புரம் விரைவு ரயில் (வண்டி எண்: 06690/06691) தாம்பரம் - விழுப்புரம் மெமு விரைவு ரயில் (வண்டி எண்: 06027/06028) ஆகிய ரயில்கள் ஜூலை முதல் டிசம்பா் வரை பௌா்ணமி கிரிவலம் நாள்களில் திருவண்ணாமலை வரை நீட்டிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஏபிஜிபி அமைப்பு செயலா் எம்.என்.சுந்தா் தெற்கு ரயில்வேக்கு நன்றி தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒன்றிய அளவிலான பண்பாட்டுப் போட்டி: சாஸ்தான்குளம் சமய வகுப்பு சாதனை

நாஞ்சில் கத்தோலிக்க கல்லூரி கலை விழா

இளம் விஞ்ஞானி மாணவா்களுக்கு அறிவியல் நுட்ப மதிப்பீட்டு முகாம்

குலசேகரம் கல்லூரியில் யோகா விழிப்புணா்வு முகாம்

10 வாக்குகளைப் பதிவு செய்வதற்காக தோ்தல் அலுவலா்கள் 175 கி.மீ. பயணம்!

SCROLL FOR NEXT