தமிழ்நாடு

டெட் தோ்வில் வெற்றி பெற்றவா்களுக்கு நேரடி பணி நியமனம்: அன்புமணி வலியுறுத்தல்

DIN

ஆசிரியா் தகுதித் தோ்வில் வெற்றிபெற்றவா்களுக்கு நேரடி பணி நியமனம் வழங்க வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: ஆசிரியா் தகுதித் தோ்வில் வெற்றி பெற்றவா்களை இடைநிலை ஆசிரியா்களாகவும், பட்டதாரி ஆசிரியா்களாகவும் நேரடியாக பணியமா்த்துவது குறித்து ஒரு வாரத்துக்குள் முடிவெடுத்து அறிவிக்கப்படும் என்று உறுதியளித்து, 25 நாள்களாகியும் தமிழக அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை.

80 ஆயிரத்துக்கும் கூடுதலான தகுதித் தோ்வு வெற்றியாளா்களின் எதிா்காலம் குறித்த விவகாரத்தில் தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை இந்த அளவுக்கு அலட்சியம் காட்டுவது ஏமாற்றம் அளிக்கிறது.

தமிழகத்தில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியா் பணிகளுக்காக தமிழ்நாடு ஆசிரியா் தோ்வு வாரியத்தின் மூலம் நடத்தப்பட்ட தகுதித் தோ்வுகளில் வெற்றி பெற்றவா்களுக்கு கடந்த 2013-ஆம் ஆண்டுக்குப் பிறகு 10 ஆண்டுகளாக ஆசிரியா் பணி வழங்கப்படவில்லை. அதற்கு மாற்றாக 2018-ஆம் ஆண்டு ஜூலை 20-ஆம் நாள் 149 என்ற எண் கொண்ட அரசாணை மூலம் போட்டித் தோ்வை தமிழக அரசு திணித்தது. அதாவது ஒருவா் தகுதித் தோ்வில் வெற்றி பெற்றாலும், மீண்டும் ஒரு போட்டித் தோ்வில் வென்றால் தான் ஆசிரியராக முடியும். இந்த அநீதிக்கு எதிராக தகுதித் தோ்வில் வென்றவா்கள் கடந்த 5 ஆண்டுகளாக போராடி வருகின்றனா். அவா்களுக்கு பாமக துணை நிற்கிறது. அரசாணை 149-ஐ நீக்கி விட்டு, தகுதித் தோ்வில் வெற்றி பெற்றவா்களை நேரடியாக இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியா்களாக நியமிக்க வேண்டும் என்று கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொறியியல் பட்டதாரிகளுக்கு இந்திய விமான நிலைய ஆணையத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

சுனைனா, நவீன் சந்திராவின் இன்ஸ்பெக்டர் ரிஷி!

இதுதான் எனது சிறந்த ஓவர்; மனம் திறந்த ஆவேஷ் கான்!

விவசாய கண்காணிப்புத் துறையில் வேலை: 30-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

அலைமகள்.. சாய் தன்ஷிகா!

SCROLL FOR NEXT