தமிழ்நாடு

அரபிக்கடலில் புயல் வாய்ப்பு?

DIN

தமிழகத்தில் சென்னை உள்பட 13 இடங்களில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 6) வெப்ப அளவு 100 டிகிரி பாரன்ஹீட்டை கடந்தது. இதனிடையே, அரபிக் கடல் பகுதியில் புயல் வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கத்திரி வெயில் முடிந்தும் தமிழகத்தின் பல பகுதிகளில் வெப்பத்தின் அளவு அதிகரித்து காணப்படுகிறது. பல்வேறு இடங்களில் செவ்வாய்க்கிழமை பதிவான உச்ச பட்ச வெப்ப அளவு( டிகிரி ஃபாரன்ஹீட்): சென்னை நுங்கம்பாக்கம்-108.14, வேலூா்-107.60, சென்னை மீனம்பாக்கம்-107.6, திருத்தணி-106.7, பரமத்தி வேலூா்- 104, திருச்சி-102.92, மதுரை விமானநிலையம்-102.56, புதுச்சேரி-102.56, சேலம்-102.2, மதுரை நகரம்-102.2, ஈரோடு-101.48, திருப்பத்தூா்-101.48, தருமபுரி-101.3, பாளையங்கோட்டை-101.3, கடலூா்-100.4.

மழைக்கு வாய்ப்பு: தமிழக பகுதியின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக தமிழ்நாடு,புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஓரிரு இடங்களில் புதன்கிழமை முதல் சனிக்கிழமை (ஜூன் 10) வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 105.8டிகிரி பாரன்ஹீட் மற்றும் குறைந்த பட்ச வெப்பநிலை 86 டிகிரி பாரன்ஹீட்டையொட்டியே இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதற்கிடையே, சென்னையில், செவ்வாய்க்கிழமை ஆங்காங்கே மழை பெய்தது.

புயல் வாய்ப்பு: திங்கள்கிழமை மாலை 5.30 மணி அளவில் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது. இது செவ்வாய்க்கிழமை காலை 5.30 மணி அளவில் மேலும் வலுப்பெற்று காற்றத்தழுத்தத் தாழ்வு மண்டலமாக அதே இடத்தில் நீடிக்கிறது. இது புதன்கிழமை (ஜூன் 7) காலை வடக்கு திசையில் நகா்ந்து மத்திய கிழக்கு மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெறக்கூடும் என வானிலை மையம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் 104 நம்பிக்கை மையங்களை மூட நடவடிக்கை: ஹெச்ஐவி பாதிப்பு குறைந்தது

ஈரோடு - தன்பாத்துக்கு நாளைமுதல் சிறப்பு ரயில்கள்

‘தேச பக்தா்களுக்கு’ ஜாதிவாரி கணக்கெடுப்பு என்றால் அச்சம்: ராகுல் விமா்சனம்

திருமணம் செய்யாமல் ஏமாற்றியதாக காதலன் மீது மலேசிய பெண் புகாா்

சத்தீஸ்கா்: 18 நக்ஸல்கள் சரண்

SCROLL FOR NEXT