தமிழ்நாடு

நச்சுவாயு: திருப்பூர் அருகே தலைவலி, வாந்தியால் 20 பேர் மருத்துவமனையில் அனுமதி

DIN

திருப்பூர் : திருப்பூர் வெங்கமேடு பகுதியில் உள்ள தனியார் சலவை ஆலையில் இருந்து வெளியேறிய நச்சுவாயுவை சுவாசித்த 20 பேர் தலைவலி, வாந்தியால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

திருப்பூர் வெங்கமேடு பகுதியில் தனியாருக்குச் சொந்தமான சலவை ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் இருந்து புதன்கிழமை பிற்பகலில் நச்சுவாயு வெளியேறியுள்ளது. இந்த வாயுவை சுவாசித்த அப்பகுதியைச் சேர்ந்த 15 சிறுவர்கள் உள்பட 20 பேருக்கு தலைவலி, வாந்தி, கண் எரிச்சல், மூச்சுத்திணறல் உள்ளிட்ட உபாதைகள் ஏற்பட்டுள்ளது. 

இதைத்தொடர்ந்து, மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு குமார் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பின்னர் மருத்துவர்களின் அறிவுறுத்தலின்பேரில் 8 பேர் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும், அப்பகுதியில் உள்ள 50க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவப் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.  

இதுகுறித்த தகவலின்பேரில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ், மாநகராட்சி ஆணையர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர், மாநகர் நகர் நல அலுவலர் கெளரி சரவணன், திருப்பூர் தெற்கு சட்டப்பேரவை உறுப்பினர் க.செல்வராஜ், திருப்பூர் வடக்கு சட்டப்பேரவை உறுப்பினர் கே.என்.விஜயகுமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். 

மேலும், அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு மருத்துவப் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், இந்தப் பகுதியில் ஏராளமான சலவை ஆலைகள் செயல்பட்டு வருகிறது. இங்கு துணிகளை காம்பேக்டிங் செய்யும்போது ஒரு விதமான ரசாயனம் சேர்க்கப்படுவதால் இத்தகையை பாதிப்புகள் ஏற்படுகிறது. ஆகவே, மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் சலவை ஆலைகளில் ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு!

சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

அதிமுக, தேமுதிக கூட்டணிக்கு நல்ல தீர்ப்பை மக்கள் வழங்குவார்கள்: பிரேமலதா நம்பிக்கை

கொலையாளி வெறும் நண்பர்தான்: மகள் கொலை குறித்து காங்கிரஸ் தலைவர்

மறுவெளியீட்டிலும் வசூலை வாரி குவிக்கும் கில்லி!

SCROLL FOR NEXT