ஆக்கூர் அருகே காலமாநல்லூர் ஊராட்சி குமாரக்குடி கிராமத்தில் ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் ஆக்கூர் அருகே காலமாநல்லூர் ஊராட்சி குமாரக்குடி ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு திருப்பணிகள் நடைபெற்று முடிவடைந்த நிலையில்
கடந்த 6-ஆம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கப்பட்டு புதன்கிழமை 2-ஆம் கால யாக பூஜைகள் முடிவடைந்தது.
படிக்க: ஜூன் 17ல் மாணவர்களை சந்திக்கிறார் நடிகர் விஜய்!
தொடர்ந்து பூர்ணாகஹூதி, மகா தீபாரதனை நடைபெற்றது. காலை 10 மணிக்கு யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பாடு செய்யப்பட்டு மங்கள வாத்தியம் மற்றும் சிவ வாத்தியம் முழங்கக் கோயில் வளம் வந்து விமான கலசங்களை அடைந்தன. சிவாச்சாரியார்கள் விமான கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினர். தொடர்ந்து அம்மன் பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் கிராமவாசிகள் செய்திருந்தனர். பாதுகாப்புப் பணியில் பொறையாறு போலீசார் ஈடுபட்டிருந்தனர்.