தமிழ்நாடு

ஆவின் நிர்வாக சீரமைப்பு முன்னெடுப்புகளை தவறாக சித்தரிப்பது வேதனை: மனோ தங்கராஜ்

DIN

ஆவின் நிர்வாகத்தை சீரமைக்க எடுக்கப்படும் நல்ல முன்னெடுப்புகளைக்கூட தவறாக சித்தரிப்பது மிகுந்த வருத்தத்திற்கு உரிய செயலாகும் என்று தமிழக பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஆவின் நிறுவனத்தில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக, நிர்வாகம் சார்ந்த பணிகளை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, ஒப்பந்தப் பணியாளர்கள் சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படுத்தும் விதமாக ஒப்பந்ததாரர்கள் தொழிலாளர்களை பணியமர்த்தும் போது ஒப்பந்ததாரர்கள் தொழிலாளர்கள் நல சட்ட விதிகளுக்கு உட்பட்டு பணியாளர்களை தேர்வு செய்ய வேண்டும்.

மேலும், அரசு நிர்ணயித்துள்ள ஊதியம், பிஎஃப் மற்றும் இஎஸ்ஐ ஆகியவற்றை சரிவர வழங்குவதை உறுதிப்படுத்தவதுடன், அவர்களுக்கு வழங்கப்படுகின்ற ஊதியம் அவரவர் வங்கி கணக்குகளில் செலுத்தப்பட வேண்டும் என்பது போன்ற உத்தரவுகளை பிறப்பித்து அதற்கான நடவடிக்கைகளை அலுவலர்கள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

ஆவின் நிறுவனத்தில் விதிகளுக்கு புறம்பாக எந்த நபரும் தற்போது பணியில் இல்லை என்பதை உறுதி செய்துள்ளோம். குறிப்பாக குழந்தை தொழிலாளர்கள் நிச்சயமாக பணியில் இல்லை என்பதை உறுதி செய்துள்ளோம்.

அம்பத்தூர் ஆவினில் 50க்கும் மேற்பட்ட குழந்தை தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர் என்ற செய்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பானதும், வேண்டும் என்றே ஆவின் நிறுவனத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதோடு, நட்டத்தை ஏற்படுத்தும் நோக்கத்தோடு சித்தரிக்கப்பட்ட செய்தியாகும்.

இது குறித்து முறையான விசாரணையினை காவல்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பால்வளத்துறை அமைச்சர் அவர்களும் செய்தி வெளியிடப்பட்ட உடனேயே அம்பத்தூர் சென்று நேரடி விசாரணை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. மேலும், இச்செயலை திட்டமிட்டு அரங்கேற்றியவர்கள் மீது குழந்தைகள் உரிமை பாதுகாப்பு குழுவின் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த தவறான செய்தியை சித்தரித்து வழங்கிய ஊடகம் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ள நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இது போன்று ஆவின் போக்குவரத்து வழித்தட பிரிவுகளில் தவறுகள் நடைபெறுகிறதா என்பதை கண்டுப்பிடிக்கவும் அவற்றில் தேவையான நடைமுறை மாற்றங்கள் செய்யவும் அறிவுறுத்தப்பட்டு அலுவலர்கள் அப்பணியை மேற்கொண்டு வருகின்றார்கள்.

அவ்வாறு மேற்கொண்ட விசாரணையில் வேலூர் மாவட்டத்தில் ஒரே எண்ணில் இரண்டு வாகனங்கள் இயங்கி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து போக்குவரத்து வழித்தட ஒப்பந்ததாரரின் மீது நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

காவல்துறை மூலமாகவும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இவையெல்லாம் நிர்வாகத்தை சீரமைக்க எடுக்கப்படும் நல்ல முன்னெடுப்புகள். ஆனால், இவற்றை தவறாக சித்தரிப்பது மிகுந்த வருத்தத்திற்கு உரிய செயலாகும்.

ஆவின் நிறுவனம் மட்டுமே ஒரே சீரான விலையை அனைத்து காலங்களிலும் பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்குவதோடு ஒரே சீரான குறைந்த விலையில் தரமாக பால் மற்றும் பால் உபபொருட்களை தமிழ்நாடு மக்களுக்கு தந்து வருகிறது. பால் உற்பத்தி மற்றும் பால் கொள்முதலை பெருக்க 
தமிழக முதல்வர் ஆலோசனைகளின் பெயரில் பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் மிக விரைவாக எடுக்கப்பட்டு வருகிறது.

நிர்வாக ரீதியாக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளை பொது வெளியில் தவறான கண்ணோட்டத்தில் சித்தரிப்பது தேவையில்லாததும், தவிர்கப்பட வேண்டியதாகும். ஆவின் ஒரு பொதுத்துறை நிறுவனம் அதனுடைய செயல்பாடும், வளர்ச்சியும் பால் உற்பத்தியாளர்களுக்கும், பொது மக்களுக்கும் பலன்களை தரக்குடிய ஒன்றாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களிப்பதற்காக அமெரிக்காவிலிருந்து தஞ்சை வந்த மென்பொறியாளர்

102 மக்களவை தொகுதிகளில் இன்று பதிவான வாக்குப்பதிவு விவரம்

2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலை விட வாக்குப்பதிவு அதிகரிக்க வாய்ப்பு?

முதல்கட்ட வாக்குப்பதிவு: 102 தொகுதிகளின் ஒட்டுமொத்த நிலவரம்!

நாக்பூரில் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்கரி நம்பிக்கை

SCROLL FOR NEXT