தமிழ்நாடு

திராவிட மாடல் ஆட்சிக்கு அடித்தளம் கருணாநிதி: மு.க. ஸ்டாலின்

DIN

சென்னை மெரினா கடற்கரையில் ஆகஸ்ட் 7ஆம் தேதி கருணாநிதி நினைவிடம் திறக்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

சென்னை பெரம்பூரில் உள்ள திடலில் கருணாநிதி நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் இன்று (ஜூன் 7) நடைபெற்றது. 

இதில் கலந்துகொண்டு உரையாற்றிய முதல்வர் மு.க. ஸ்டாலின், ஒடிசா ரயில் விபத்து காரணமாக கருணாநிதி நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் ரத்து செய்யப்பட்டது. 

கருணாநிதி நம்மை விட்டு பிரிந்தார் என்று சொல்வதை விட எங்கும் இருந்து நம்மை கண்காணிக்கிறார். கருத்தியலின் தலைவராக கருணாநிதி இருந்தார்

கருணாநிதி கண்காணிக்கிறார் என்ற எண்ணத்தில் செயல்படுகிறேன். திராவிட மாடல் ஆட்சிக்கு அடித்தளமிட்டவர் கருணாநிதி. சென்னை மெரினா கடற்கரையில் ஆகஸ்ட் 7ஆம் தேதி கருணாநிதி நினைவிடம் திறக்கப்படும். 

அடுத்த ஆண்டு நடக்கவுள்ள நாடாளுமன்ற தேர்தல் நாட்டுக்கான தேர்தல் 
ஆளுநர் செய்யும் சித்து விளையாட்டுக்களை பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன். 2024 நாடாளுமன்ற தேர்தல் பாஜகவுக்கு எதிரான சக்திகளை ஒன்று சேர்க்கும் தேர்தலாக இருக்கும். 

கருணாநிதி நூற்றாண்டு விழாவை அடுத்த ஆண்டு ஜூன் 3ஆம் தேதி வரை கொண்டாடவுள்ளோம். 95 ஆண்டுகள் வாழ்ந்த கருணாநிதி மேலும் 5 ஆண்டுகள் வாழ்ந்திருந்தால் விழா நாயகனாக இருந்திருப்பார் எனக் குறிப்பிட்டார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன்? எலான் மஸ்க்

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

ஊழல் பள்ளியை நடத்துகிறார் பிரதமர் மோடி: ராகுல்

SCROLL FOR NEXT