தமிழ்நாடு

நொய்டாவில் 25 குழந்தைத் தொழிலாளர்கள் மீட்பு!

DIN

நொய்டாவில் குழந்தை தொழிலாளர்களாக பணியாற்றி வந்த 25 பேர் மீட்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். 

கொளதம் புத்தா நகர் காவல் ஆணையர் லக்ஷ்மி சிங்கின் அறிவுறுதலின்படி குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக செவ்வாய்க்கிழமை மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 

தொழிலாளர் துறை, மாவட்ட தகுதிகாண் அலுவலகம், நொய்டா சைல்ட்லைன் கூட்டாக இணைந்து ஜூன் 1 முதல் ஜூன் 30 வரை குழந்தைத் தொழிலாளர்களை ஒழிப்பதற்கும், குழந்தைகளை பிச்சையெடுக்க செய்வதைத் தடுப்பதற்கும் சிறப்பு பிரசாரம் நடத்தி வருவதாக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். 

பிரசாரத்தின் ஒரு பகுதியாக, பல்வேறு சந்தைகளில் மற்றும் சாலைகளில் பிச்சை எடுப்பதில் ஈடுபட்டிருந்த சுமார் 25 குழந்தைகள் கடந்த ஒருநாளில் மீட்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். 

குழந்தைத் தொழிலாளர் தடை மற்றும் ஒழுங்குமுறை திருத்தச் சட்டம் 2016யின் படி 14 வயதிற்குள்பட்ட குழந்தைகள் பணியில் அமர்த்தப்படுவதைத் தடை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

இன்று சாதகம் யாருக்கு: தினப்பலன்கள்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT