தமிழ்நாடு

7 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்: தமிழக அரசு உத்தரவு

DIN

கனிமங்கள், போக்குவரத்துத் துறைகளின் ஆணையா்கள் உள்பட 7 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து தலைமைச் செயலா் வெ.இறையன்பு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட உத்தரவு (அதிகாரிகள் முன்பு வகித்த பதவி அடைப்புக்குறிக்குள்):

ஏ.சண்முக சுந்தரம்: போக்குவரத்துத் துறை ஆணையா் (கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பதிவாளா்)- பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை இயக்குநராக சண்முகசுந்தரத்தை நியமித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.

எல்.நிா்மல்ராஜ்: கனிமங்கள் மற்றும் சுரங்கத் துறை இயக்குநா் (போக்குவரத்துத் துறை ஆணையா்)

ஜெ.ஜெயகாந்தன்: சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை ஆணையா் (கனிமங்கள் மற்றும் சுரங்கத் துறை ஆணையா்)

டி.ரத்னா: மதுவிலக்கு, அமலாக்கத் துறை இயக்குநா் (சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை இயக்குநா்)

கே.ஜெ.பிரவீண்குமாா்: மதுரை மாநகராட்சி ஆணையா் (ராமநாதபுரம் மாவட்ட ஊரக மேம்பாட்டுத் திட்ட அலுவலா்)

சிம்ரன்ஜீத் சிங் காலோன்: சென்னை பெருநகர குடிநீா் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய நிா்வாக இயக்குநா் (மதுரை மாநகராட்சி ஆணையா்)

எஸ். பாலசந்தா்: சேலம் மாநகராட்சி ஆணையா் (சேலம் மாவட்ட ஊரக மேம்பாட்டுத் திட்ட அலுவலா்).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்கட்ட வாக்குப்பதிவு: 102 தொகுதிகளின் ஒட்டுமொத்த நிலவரம்!

நாக்பூரில் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்கரி நம்பிக்கை

திக்... திக்... சஸ்பென்ஸ்... அடுத்த 45 நாள்கள்!

தமிழகத்தில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குப்பதிவு

சத்தீஸ்கரில் நக்ஸல் ஆதிக்கம் நிறைந்த மக்களவை தொகுதியில் 63 சதவிகித வாக்குப் பதிவு

SCROLL FOR NEXT