தமிழ்நாடு

13 நகரங்களில் வெயில் சதம்

7th Jun 2023 03:30 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் சென்னை உள்பட 13 நகரங்களில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 6) வெப்ப அளவு 100 டிகிரி பாரன்ஹீட்டை கடந்தது.
 கத்திரி வெயில் முடிந்தும் தமிழகத்தின் பல பகுதிகளில் வெப்பத்தின் அளவு அதிகரித்து காணப்படுகிறது. பல்வேறு இடங்களில் செவ்வாய்க்கிழமை பதிவான உச்ச பட்ச வெப்ப அளவு( டிகிரி ஃபாரன்ஹீட்): சென்னை நுங்கம்பாக்கம்-108.14, வேலூர்-107.60, சென்னை மீனம்பாக்கம்-107.6, திருத்தணி-106.7, பரமத்தி வேலூர்- 104, திருச்சி-102.92, மதுரை விமானநிலையம்-102.56, புதுச்சேரி-102.56, சேலம்-102.2, மதுரை நகரம்-102.2, ஈரோடு-101.48, திருப்பத்தூர்-101.48, தருமபுரி-101.3, பாளையங்கோட்டை-101.3, கடலூர்-100.4.
 மழைக்கு வாய்ப்பு: தமிழக பகுதியின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக தமிழ்நாடு,புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஓரிரு இடங்களில் புதன்கிழமை முதல் சனிக்கிழமை (ஜூன் 10) வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
 சென்னையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 105.8டிகிரி பாரன்ஹீட் மற்றும் குறைந்த பட்ச வெப்பநிலை 86 டிகிரி பாரன்ஹீட்டையொட்டியே இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதற்கிடையே, சென்னையில், செவ்வாய்க்கிழமை ஆங்காங்கே மழை பெய்தது என வானிலை மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT