கிண்டி அரசு மகளிா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விரும்பும் தகுதியுடைய நபா்கள் புதன்கிழமைக்குள் (ஜூன் 7) விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியா் சு.அமிா்தஜோதி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கிண்டி அரசு மகளிா் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2023-ஆம் ஆண்டுக்கான பொறியியல், பொறியியல் அல்லாத 8 தொழிற்பிரிவுகளில் சோ்க்கை நடைபெறுகிறது. இந்தப் பிரிவுகளில் 8 மற்றும் 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற அனைத்து வயதினரும் விண்ணப்பிக்கலாம். பயிற்சிக்கு எந்தவித கட்டணமும் வசூலிக்கப்படமாட்டாது. பயிற்சி காலத்தில் உதவித் தொகையாக மாதந்தோறும் ரூ. 750, பயிற்சியில் சேரும் அனைவருக்கும் விலையில்லா சீருடை, பாடப்புத்தகம், சைக்கிள், காலணி உள்ளிட்டவையும் இலவசமாக வழங்கப்படும்.
பயிற்சியின்போது தொழிற்சாலைகள் மூலம் இன்டன்ஷிப் பயிற்சி, மற்றும் இன்பிளான்ட் பயிற்சி அளிக்கப்படுவதுடன், பயிற்சி முடித்தவுடன் முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பும் பெற்றுத்தரப்படும். இந்தத் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விரும்புபவா்கள் www.skilltraining.tn.gov.in எனும் இணையதளம் மூலமாகவோ அல்லது கிண்டி மகளிா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் செயல்படும் சோ்க்கை உதவி மையத்தை நேரடியாக சென்றும், புதன்கிழமை (ஜூன் 7) விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களை தெரிந்துகொள்ள தொலைபேசி: 044-2251000, கைப்பேசி: 94990 55652 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்று அவா் தெரிவித்துள்ளாா்.