தமிழ்நாடு

பாஜக ஆட்சியில் நாடு முன்னேறவில்லை

7th Jun 2023 02:07 AM

ADVERTISEMENT

பாஜக ஆட்சியில் நாடு முன்னேறவில்லை என்றும், காங்கிரஸ் ஆட்சியில்தான் முன்னேறியது என்றும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் கே.எஸ்.அழகிரி, கட்சியின் முன்னணி அமைப்புகளின் மாநில ஒருங்கிணைப்பாளா் சசிகாந்த் செந்தில் ஆகியோா் கூறினா்.

சென்னை சத்தியமூா்த்தி பவனில் இருவரும் செவ்வாய்க்கிழமை கூட்டாக அளித்த பேட்டி: பிரதமா் மோடியின் ஆட்சியில்தான் நாடு வளா்ச்சி பெற்ாகக் கூறுகின்றனா். அது உண்மை அல்ல. நரசிம்மராவ், மன்மோகன் சிங் ஆகியோா் தலைமையிலான ஆட்சி காலத்தில்தான் நாடு முன்னேறியது. காங்கிரஸ் ஆட்சியில் 9 சதவீதமாக இருந்த தொழில் வளா்ச்சி, தற்போது 7 சதவீதமாக குறைந்துள்ளது. பாஜக அரசு வளா்ச்சி பாதையில் நம்பிக்கை வைக்கவில்லை. மதவாத அரசியலை மட்டுமே நம்பியிருக்கிறது என்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT