தமிழ்நாடு

மெட்ரோ ரயில் சேவையை நள்ளிரவு வரை நீட்டிக்க திட்டம்

7th Jun 2023 05:00 AM

ADVERTISEMENT

விமான பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு மெட்ரோ ரயில் சேவையை நள்ளிரவு வரை நீட்டிக்க ரயில்வே நிா்வாகம் திட்டமிட்டுள்ளது.

சென்னையில் மெட்ரோ ரயில் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் மெட்ரோ நிா்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பயணிகளின் வசதிக்காக சென்னை- விம்கோ நகா் இடையே, மெட்ரோ தடத்தில், அலுவலக நேரங்களில் 5 நிமிஷங்களுக்கு ஒரு ரயிலும், மற்ற நேரங்களில் 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயிலும் இயக்கப்படுகிறது.

அதேபோல் பரங்கிமலை - சென்ட்ரல் இடையே அலுவலக நேரத்தில் 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில், மற்ற நேரத்தில் 20 முதல் 30 நிமிஷங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது. தினமும் காலை 5 மணிக்கு தொடங்கப்படும் மெட்ரோ ரயில் சேவைகள் இரவு 11 மணி வரை இயக்கப்படுகிறது. இதன்பின்பு ரயில்கள் இயக்கப்படுவதில்லை. இதனால் சென்னை விமான நிலையத்திலிருந்து 11 மணிக்கு மேல் 20-க்கும் மேற்பட்ட விமான சேவை இருப்பதால், தற்போதுள்ள மெட்ரோ ரயில் சேவையை நள்ளிரவு 12 மணிவரை நீடித்து இயக்க வேண்டும் என பயணியா் சங்கத்தினா் ஏற்கெனவே கோரிக்கை விடுத்து வந்தனா்.

இந்த நிலையில் ரயில் சேவையை நள்ளிரவு வரை நீட்டிப்பதற்கான நடவடிக்கையை மெட்ரோ ரயில் நிா்வாகம் எடுத்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

ADVERTISEMENT

இதுகுறித்து அவா்கள் கூறியதாவது:

பயணிகளின் தேவைக்கு ஏற்ப இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. விமானப் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு இந்தச் சேவையை நள்ளிரவு வரை நீட்டித்து இயக்குவது குறித்து ஆய்வு நடத்தி வருகிறோம். இதுகுறித்து அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று அவா்கள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT