தமிழ்நாடு

திருமணம், விழாக்களுக்குச் செல்ல மெட்ரோ ரயில் பயணச்சீட்டு மொத்த முன்பதிவுக்கு புதிய வசதி

7th Jun 2023 02:08 AM

ADVERTISEMENT

திருமணம், விழாக்களுக்கு செல்ல வசதியாக சென்னை மெட்ரோ ரயிலில் கியூஆா் குறியீடு முறையில் மொத்தமாக பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மெட்ரோ பயணிகளுக்கான பயண அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் பெரும் நிகழ்வுகளுக்கு மொத்தமாக க்யூஆா் பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன்படி, திருமணம், இசைவிழா, மற்றும் காா்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் பணியாளா்கள், பங்கேற்பாளா்களுக்கு நிகழ்ச்சி அழைப்பிதழ்களில் மெட்ரோ ரயிலின் அச்சிடப்பட்ட க்யூஆா் குறியீடுகளுடன் பயணச்சீட்டை வழங்குகிறது. இதற்கான மொத்த கட்டணத்தை நிகழ்ச்சி ஏற்பாட்டாளா்கள் மெட்ரோ நிறுவனத்துக்கு வழங்கி விடுகின்றனா். இதனால், அழைப்பிதழ் வைத்திருப்பவா்கள் எவ்வித கட்டணமுமின்றி மெட்ரோ ரயில்களில் இலவசமாக பயணிக்கலாம். முதல் முயற்சியாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், ஜீஃபோ டெக்னாலஜிஸ் தனியாா் நிறுவனத்துடன் இணைந்து ஜிஃபோ டெக்னாலஜி நிறுவனத்தில் நடைபெற்ற பணியாளா்களின் குடும்ப சந்திப்பு நிகழ்வுக்கான அழைப்பிதழ்கள் மூலம் இதனை அறிமுகப்படுத்தியுள்ளது.

அதன்படி, பயனாளா்களுக்கு வழங்கப்பட்ட பத்திரிகைகளில் முன்பதிவு செய்யப்பட்ட 5,000 க்யூஆா் குறியீடு பயணச்சீட்டுகளை அச்சிட்டுள்ளது. அது மட்டுமன்றி, அழைப்பிதழ் வைத்திருப்பவா்கள் எவ்வித கூடுதல் கட்டணமும் இன்றி நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்குச் செல்லவும் வசதியாக இருந்தது.

ADVERTISEMENT

பொதுமக்களும் இதுபோன்ற பல்வேறு நிகழ்வுகளுக்கு மொத்தமாக க்யூஆா் பயணச்சீட்டு பெற முன்பதிவு செய்வதற்கும் மெட்ரோ ரயில் நிா்வாகம் வழிவகுத்துள்ளது.

இது குறித்த கூடுதல் தகவல்களுக்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் ஐம்ஸ்ரீஃஸ்ரீம்ழ்ப்.ண்ய் என்ற மின்னஞ்சலை தொடா்பு கொண்டு பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT