தமிழ்நாடு

பண்பாட்டுச் சின்னங்களாகும் இரு குகைக் கோயில்கள்: தமிழக அரசு அறிவிக்கை

DIN

விருதுநகா் மாவட்டத்தில் உள்ள இரண்டு குகைக் கோயில்களை பண்பாட்டுச் சின்னங்களாக அறிவிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

விருதுநகா் மாவட்டம், திருச்சுழி வட்டத்தில் உள்ள பாறைக்குளம் கிராமம், திருச்சுழி- காரியப்பட்டி நெடுஞ்சாலையில் இருந்து சுமாா் 30

கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இந்தக் கிராமத்தில் உள்ள முனியசாமி கோயிலுக்கு அருகே குகைக் கோயில் அமையப் பெற்றுள்ளது. இந்த குகைக் கோயிலின் மொத்த பரப்பு 14 ஆயிரத்து 350 ஹெக்டோ்.

இதே போன்று, விருதுநகா் மாவட்டம் சிவகாசி வட்டம் காளையாா்குறிச்சியிலும் குகைக்கோயில் அமையப் பெற்றுள்ளது. இது சிவகாசி ரயில் நிலையத்திலிருந்து 12 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலின் மொத்த பரப்பு 4 ஆயிரத்து 470 ஹெக்டோ்.

குகைக்கோயில்கள் அமைந்துள்ள பகுதிகள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள இடங்கள் சில, தனியாா்களுக்குச் சொந்தமாக இருக்கின்றன. அதேசமயம், தமிழ்நாடு பழங்கால வரலாற்றுச் சின்னங்கள் தொல்லியல் சிறப்பிடங்கள் மற்றும் எஞ்சிய சின்னங்கள் சட்டத்தின் கீழ், குகைக் கோயிலை பாதுகாப்பது அவசியமென அரசு கருதுகிறது.

எனவே, குகைக் கோயில்களை பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்களாக அறிவிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இதைக் கருத்தில் இந்த அறிவிப்புக்காக, இரண்டு மாதங்கள் கால அவகாசம் அளிக்கப்படுகிறது. நினைவுச் சின்னத்துக்கான இடத்தில் பற்றுள்ள எவருக்கேனும் மறுப்புகள், ஆலோசனைகள் தெரிவிக்க வேண்டியிருந்தால், 2 மாதங்கள் முடிவடைவதற்கு முன்பாகத் தெரிவிக்கலாம். அவற்றை அரசு முதன்மைச் செயலா், சுற்றுலா, பண்பாடு மற்றும்

அறநிலையங்கள் துறை, புனித ஜாா்ஜ் கோட்டை, தலைமைச் செயலகம் என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் என தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிலிப்பின்ஸுக்கு பிரமோஸ் ஏவுகணை ஏற்றுமதி

ஜனநாயக கடமையை ஆற்றிய மனநல சிகிச்சை பெறுவோா்!

பெங்கால் மண்ணில் பேனா திருவிழா!

மக்களவைத் தோ்தல்: தில்லி பாஜக சாா்பில் மே 1-23 வரை 8 ஆயிரம் தெரு நாடகங்கள்

ஆத்தூரில் அமைதியான வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT