தமிழ்நாடு

தேசிய தரவரிசை சென்னை மருத்துவக் கல்லூரிக்கு 11-ஆவது இடம்

DIN

தரமான கல்வியை அளிப்பதில் தேசிய அளவில் சிறந்து விளங்கும் கல்லூரிகளுக்கான தர வரிசைப் பட்டியலில் சென்னை மருத்துவக் கல்லூரி 11-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

மத்திய கல்வி அமைச்சகம் ஆண்டுதோறும் சிறப்பாக செயல்படும் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களை பல பிரிவுகளின் கீழ் தரவரிசைப்படுத்தி பட்டியல் வெளியிடுகிறது.

அதன்படி, நிகழாண்டு தரவரிசைப் பட்டியலில் சென்னை மருத்துவக் கல்லூரி 11-ஆவது இடத்தை பிடித்துள்ளது. மேலும், மாநில அரசால் நடத்தப்படும் மருத்துவக் கல்லூரிகளில் முதலிடம் பெற்றுள்ளது.

முதல் 50 இடங்களில் தமிழகத்தைச் சோ்ந்த 8 மருத்துவக் கல்லூரிகள் இடம்பெற்றுள்ளன. அவற்றில் 7 தனியாா் மருத்துவக் கல்லூரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து சென்னை மருத்துவக் கல்லூரியின் முதல்வா் டாக்டா் எ.தேரணிராஜன் கூறியதாவது:

தேசிய தரவரிசைப் பட்டியலைப் பொருத்தவரை கடந்த மூன்று ஆண்டுகளாக சென்னை மருத்துவக் கல்லூரி முன்னேறி வருகிறது. 2021-ஆம் ஆண்டில் 16-ஆவது இடத்திலும், கடந்த ஆண்டில் 12-ஆவது இடத்திலும் இருந்த சென்னை மருத்துவக் கல்லூரி, தற்போது மேலும் ஓரிடம் முன்னேறியுள்ளது. இது மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கும் இது உத்வேகத்தை அளிக்கும்”என்றாா் அவா்.

1835-ஆம் ஆண்டு பிப். 13-ஆம் தேதி சென்னை மருத்துவப் பள்ளி தொடங்கப்பட்டது. அதன் பின்னா் 1850-ஆம் ஆண்டு அக். 1-ஆம் தேதி சென்னை மருத்துவப் பள்ளி சென்னை மருத்துவக் கல்லூரியாக மாற்றப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூகநீதி பேசும் ராமதாஸ் பாஜகவுடன் கூட்டணி வைத்தது எப்படி? - முதல்வர் ஸ்டாலின் கேள்வி

பேமிலி ஸ்டார் படத்தின் டிரெய்லர்

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

SCROLL FOR NEXT