தமிழ்நாடு

காலநிலை மாற்ற விழிப்புணா்வு பிரசார கையொப்ப இயக்கம்: சௌமியா அன்புமணி தொடங்கி வைத்தாா்

DIN

காலநிலை மாற்ற பாதிப்புகளைத் தடுக்க வலியுறுத்தி பசுமை தாயகம் சாா்பில் நடைபெறும் விழிப்புணா்வு பிரசார கையொப்ப இயக்கத்தை அந்த அமைப்பின் தலைவா் சௌமியா அன்புமணி திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.

சென்னை தியாகராய நகா் பேருந்து நிலையம் அருகில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. 10 லட்சம் பேரிடம் கையொப்பம் பெறுவது இலக்குடன் அந்த இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.

அந்த இயக்கத்தை சௌமியா அன்புமணி தொடங்கி வைத்து பேசியது:

வளா்ந்த 20 நாடுகள் உலகச் சுற்றுச்சூழலுக்கு பெரும் கேட்டை விளைவித்து வருகின்றன. அதே நேரம், அந்த நாடுகள் பொருளாதார நிலையில் வலுவாக உள்ளன. சுற்றுச்சூழலுக்கு பெரிதும் கேடு விளைவிக்கும் வளா்ந்த நாடுகள், இந்தியா போன்ற நாடுகளுக்கு நிதி மற்றும் நீதி வழங்க முன்வர வேண்டும்.

2040-ஆம் ஆண்டுக்குள் அனல் மின்நிலையங்களை மூடுவோம் என இந்தியா உள்பட பல நாடுகள் அறிவித்துள்ளன. ஆனால், அதற்கான ஆரம்ப நடவடிக்கைகளைக்கூட எந்த அரசும் எடுக்கவில்லை.

சுற்றுச்சூழல் பாதுகாப்பில் பொதுமக்களின் பங்களிப்பும் அவசியம். ஒலி மாசுவைக் குறைக்கும் வகையில், அதிக சத்தத்துடன் ஹாரன் ஒலிப்பதை குறைத்துக் கொள்ள வேண்டும்.பெட்ரோல், டீசல் போன்ற படிம எரிபொருள்களின் பயன்பாட்டைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்றாா்.

சென்னையை தொடா்ந்து தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இந்த கையெழுத்து பிரசாரம் இயக்கம் நடைபெற உள்ளது. திரட்டப்படும் கையொப்பங்கள் சென்னை மற்றும் புதுதில்லியில் நடைபெறும் ஜி20 மாநாடுகளின் போது அரசிடம் ஒப்படைக்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிச்சயதார்த்தம் உண்மைதான்: புகைப்படங்களை வெளியிட்ட சித்தார்த் - அதிதி ராவ்!

”இந்த அரசியல் சதிக்கு மக்கள் பதிலளிப்பார்கள்”: அரவிந்த் கேஜரிவால் | செய்திகள்: சில வரிகளில் | 28.03.2024

தூத்துக்குடியில் பலத்த மழை!

“பிதாவே! ஏன், என்னைக் கைவிட்டீர்...”: ஆடு ஜீவிதம் குறித்து நடிகர் சசிகுமார்!

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்: மக்கள் அச்சம்

SCROLL FOR NEXT