தமிழ்நாடு

சென்னையில் 2வது நாளாக பரவலாக மழை: மக்கள் மகிழ்ச்சி!

6th Jun 2023 04:47 PM

ADVERTISEMENT

சென்னையில் கோடை வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், நேற்று போல் இன்றும் திடீரென மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

மேற்கு திசை காற்று மற்றும் வெப்பச் சலனத்தின் காரணமாக சென்னையில் மழை பெய்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

சென்னை புறநகர்ப் பகுதிகளான தேனாம்பேட்டை, மெரினா, நுங்கம்பாக்கம், சைதாபேட்டை, ஆழ்வார்பேட்டை, அண்ணாசாலை, புரசைவாக்கம், அயனாவரம், வடபழனி உள்ளிட்ட பல பகுதிகளிலும் பலத்த மழை பெய்து வருகின்றது. 

படிக்க: நகம் அடிக்கடி உடைகிறதா? அதற்குக் காரணம் இதுதான்!

ADVERTISEMENT

தமிழகத்தில் இன்று இயல்பை விட 2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரித்து காணப்பட்ட நிலையில், மக்கள் வெளியில் தலைகாட்ட முடியாமல் அவதியடைந்து வந்தனர். இந்நிலையில், சென்னை நகர்ப் பகுதி முழுவதும் பெய்து வரும் மழையால் வெப்பம் சற்று தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. நேற்றும் இதேபோன்று மழை பெய்து மக்களிடையே குதுகலத்தை ஏற்படுத்தியது. 

சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 40-41 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும். 

படிக்க: இதெல்லாம் உங்கள் சமையலறையில் இருக்கிறதா? உஷார்!

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT