தமிழ்நாடு

ஐபிஎல் கோப்பையுடன் முதல்வரை சந்தித்த சிஎஸ்கே அணி உரிமையாளர்!

6th Jun 2023 02:22 PM

ADVERTISEMENT

ஐபிஎல் கோப்பையுடன் முதல்வர் மு.க.ஸ்டாலினை, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உரிமையாளர் சந்தித்துப் பேசினார்.

ஐபிஎல் 2023 கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றதையொட்டி அக்கோப்பையை இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவன துணைத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் என்.சீனிவாசன், இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் முழு நேர இயக்குநரும், சிஎஸ்கே அணியின் உரிமையாளருமான ரூபா குருநாத் ஆகியோர் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் ஐபிஎல் கோப்பையை காண்பித்து வாழ்த்துப் பெற்றனர்.

இந்நிகழ்ச்சியில் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி, சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் அணியின் தலைமை அலுவலர் காசி விஸ்வநாதன், இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் பெருநிறுவன அலுவலர் பாலாஜி, கோபிநாத் உடனிருந்தனர்.

இதையும் படிக்க: ஹைய்தி நாட்டில் கனமழை, நிலச்சரிவு: 42 பேர் பலி!

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT