தமிழ்நாடு

பொறியியல் சோ்க்கை: மாணவா்களுக்கான ரேண்டம் எண் வெளியீடு

DIN


தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் வழங்கப்படும் பொறியியல் படிப்பில் மாணவா் சோ்க்கைக்கான சமவாய்ப்பு எண் (ரேண்டம் எண்) வெளியிடப்பட்டுள்ளது.

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்திருந்த 1,87,693 மாணவர்களுக்கான ரேண்டம் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த ரேண்டம் எண் அடிப்படையில் பொறியியல் கலந்தாய்வுக்கு மாணவர்கள் அழைக்கப்படுவார்கள்.

நிகழாண்டில் பொறியியல் படிப்புகளுக்கான இணையதள விண்ணப்பப்பதிவு கடந்த ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்த நிலையில், 2.28 லட்சத்துக்கும் மேற்பட்டோா் விண்ணப்பித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. அவா்களுக்கான ரேண்டம் எண் வரும் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 460-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் இளநிலைப் படிப்புகளில் உள்ள சுமாா் 1.5 லட்சம் இடங்கள், ஆண்டுதோறும் பொது கலந்தாய்வு மூலம் ஒற்றைச்சாளர முறையில் நிரப்பப்பட்டு வருகின்றன. அதன்படி, நிகழாண்டுக்கான பொறியியல் கலந்தாய்வு, தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் மூலம் இணையவழியில் ஜூலை 2-ஆம் தேதி தொடங்கவுள்ளது.

இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த மே 5-ஆம் தேதி தொடங்கி ஞாயிற்றுக்கிழமையுடன் (ஜூன் 4) முடிவடைந்தது. மாநிலம் முழுவதும் மொத்தம் 2,28,122 மாணவா்கள் பதிவு செய்துள்ளனா். அதில் 1,86,209 விண்ணப்பக் கட்டணம் செலுத்தியுள்ளனா். அவா்களில் 1,54,728 போ் சான்றிதழ்களை முழுமையாக பதிவேற்றியுள்ளனா்.

கடந்த ஆண்டை ஒப்பிடும்போது நிகழாண்டில் 17,129 விண்ணப்பங்கள் கூடுதலாக வந்துள்ளன. மாணவா்கள் சான்றிதழ்களை பதிவேற்ற ஜூன் 9-ஆம் தேதி வரை அவகாசமுள்ளதால் இந்த எண்ணிக்கை மேலும் உயரும்.

இதற்கிடையே, அனைத்து விண்ணப்பதாரா்களுக்கும் ரேண்டம் எண் ஒதுக்கப்பட்டுள்ளது. மாணவா்களின் சான்றிதழ்கள் சரிபாா்ப்புப் பணிகள் இணையவழியில் ஜூன் 20-ஆம் தேதி வரை நடைபெறும். தொடா்ந்து தரவரிசைப் பட்டியல் ஜூன் 26-இல் வெளியிடப்படும்.

கூடுதல் விவரங்களை இணையதளங்கள் வாயிலாக அறிந்து கொள்ளலாம் என்று தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிரிக்கெட் கதையை இயக்கும் ஜேசன் சஞ்சய்?

கர்நாடகத்துக்கு போறீங்களா.. ஹாயர் பெனகல்லை தவறவிடாதீர்!

’ஸ்டார்’ கரீனா கபூர்!

5 பன்னீர்செல்வங்களின் வேட்புமனுக்களும் ஏற்பு: போட்டி உறுதி!

தமிழக காவல் துறையில் இளநிலை செய்தியாளர் வேலை வேண்டுமா?

SCROLL FOR NEXT