தமிழ்நாடு

கல்வியும், மருத்துவமும் இரு கண்கள்: மு.க. ஸ்டாலின்

6th Jun 2023 07:27 PM

ADVERTISEMENT


கல்வியும், மருத்துவமும் திராவிட மாடல் ஆட்சியின் இரு கண்கள் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை தேனாம்பேட்டையில் 500 நகர்ப்புற நலவாழ்வு மையங்களை திறந்துவைக்கும் நிகழ்ச்சி இன்று (ஜுன் 6) நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 500 நகர்ப்புற நலவாழ்வு மையங்களை  முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். 

அதனைத் தொடர்ந்து மேடையில் பேசிய முதல்வர், கல்வியும், மருத்துவமும் திராவிட ஆட்சியின் இரு கண்கள். உலக அமைப்பே பாராட்டும் வகையில் மக்களை நோக்கி மருத்துவம் திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம்.

மாநில வளர்ச்சி ஒருவருக்கு தெரியவில்லை, மக்களை குழப்பும் வகையில் பேசிவருகிறார். சுகாதாரத்தில் தேசிய அளவில் தமிழகம் 3வது இடத்தில் உள்ளதை அவர் புரிந்துகொள்ள வேண்டும்.

ADVERTISEMENT

கடுமையான கரோனா காலத்தில் திமுக ஆட்சி பொறுப்பை ஏற்றது. ஆனால், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியத்தின் செயல்பாடுகளால், அந்த கடினமாக கட்டத்தைக் கடந்தோம். அவருடன் பணியாற்றிய மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகளும் சிறப்பாக செயல்பட்டதால் கடந்து வர முடிந்தது.

கிராமப்புறங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களைப் போன்று நகரங்களுக்கும் நலவாழ்வு மையங்கள் அமைக்க வேண்டும் என சட்டப்பேரவையில் அறிவித்திருந்தேன். அது தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டார். 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT