தமிழ்நாடு

டெல்டா மாவட்டங்களில் ஜூன் 9-ல் முதல்வர் ஆய்வு

DIN

டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணிகளை ஜூன் 9 ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்கிறார்.

வரும் 11, 12 ஆகிய இரண்டு நாள்கள் சுற்றுப் பயணமாக சேலம் மாவட்டத்துக்கு வருகை தரும் தமிழ்நாடு முதலமைச்சா், சேலம் மாவட்டத்தில் நடைபெறும் கலைஞா் நூற்றாண்டு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்க உள்ளாா்.

முதலமைச்சா் வரும் 11-ஆம் தேதி சேலம் மாவட்டத்தில் கலைஞரின் சிலையை திறந்து வைத்து ஈரடுக்கு பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு முடிவுற்ற பணிகளை திறந்து, சுமாா் 50 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிட உள்ளாா். 

சேலம் மாவட்டத்தில் சீா்மிகு நகர திட்டத்தின் கீழ் முடிவுற்ற பணிகள் மற்றும் புதிதாக தொடங்கப்பட உள்ள பணிகள் என சுமாா் ரூ. 2 ஆயிரம் கோடி மதிப்பிலான பணிகளை முதல்வா் தொடங்கி வைக்க உள்ளாா். தொடா்ந்து, 12-ஆம் தேதி டெல்டா பாசனத்துக்காக மேட்டூா் அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைக்க உள்ளாா்.

இந்நிலையில், டெல்டா மாவட்டங்களில் ஜூன் 5ல் ஆய்வு மேற்கொள்ளவிருந்த முதல்வர் மு.க. ஸ்டாலின், தற்போது ஜூன் 9 ஆம் தேதி ஆய்வு செய்கிறார். தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் குறுவை சாகுபடி தொடங்கியுள்ள நிலையில் முதல்வர் ஆய்வு செய்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போராட்டம் கலைப்பு: மாணவர்கள் கைது!

கில்லி மறுவெளியீட்டு வசூல் இவ்வளவா?

மே 6-ல் திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை!

அமெரிக்க பல்கலை.களில் மாணவர்கள் - காவலர்கள் மோதல்: பாலஸ்தீன ஆதரவாளர்கள் கைது!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கன்னி

SCROLL FOR NEXT