தமிழ்நாடு

தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்!

6th Jun 2023 03:00 PM

ADVERTISEMENT

தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றி தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, போக்குவரத்துத் துறை கூடுதல் செயலராக இருக்கும் பணீந்திர ரெட்டிக்கு இயற்கை வளங்கள் துறை செயலராக கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்துத் துறை ஆணையராக சண்முகசுந்திரம், சமூக நலத்துறை மற்றும் பெண்கள் அதிகாரமளிப்புத்துறை ஆணையராக ஜெயகாந்தன் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மதுவிலக்கு மற்று ஆயத்தீர்வைத்துறை ஆணையராக ரத்னா, புவியியல் மற்றும் கனிமவளத்துறை இயக்குநராக நிர்மல்ராஜ் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT

மதுரை மாநகராட்சி ஆணையராக இருந்த சிம்ரன்ஜீத் சிங், சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரிய செயல் இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார்.

சேலம் மாநகராட்சி ஆணையராக எஸ்.பாலசந்தர், மதுரை மாநகராட்சி ஆணையராக பிரவீன்குமார் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT