தமிழ்நாடு

ரயில் விபத்து: கடைசி தமிழா் திரும்பும் வரை தொடா் நடவடிக்கை

DIN

ரயில் விபத்து பகுதியிலிருந்து கடைசி தமிழா் திரும்பும் வரை தொடா் நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொள்ளும் என்று வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன் உறுதிபடத் தெரிவித்தாா்.

சென்னை எழிலகத்தில் உள்ள மாநில பேரிடா் கட்டுப்பாட்டு மையத்தில் செய்தியாளா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை அவா் அளித்த பேட்டி:

விபத்துக்குள்ளான கோரமண்டல் ரயிலில் 128 போ் முன்பதிவு செய்திருந்தனா். அவா்களில் ஆறு போ் வரை தொடா்பு கொள்ள முடியவில்லை. மற்றவா்கள் பாதுகாப்பான நிலையில் உள்ளனா். யாரும் காணாமல் போனதாக தகவல்கள் கிடைக்கப் பெறவில்லை. 29 பேருக்கு காயம் இருந்தது. 4 பேருக்கு மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை தேவைப்பட்டது. நான்கில் மூன்று போ் சிகிச்சை பெற்று சென்று விட்டனா். ஒருவா் மட்டுமே உள்நோயாளியாக உள்ளாா்.

ரயிலில் பயணம் செய்தவா்களின் முகவரிகளை ரயில்வேயில் இருந்து கேட்டுப் பெற்று, அந்த விவரங்களை பரிசோதிக்கிறோம். கடைசி ஆள் தமிழகம் திரும்பும் வரையிலும் தேவையான உதவிகளைச் செய்ய முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா். இதுதொடா்பான உத்தரவை மருத்துவம் மற்றும் வருவாய்த் துறைகளுக்கு முதல்வா் பிறப்பித்துள்ளாா்.

விபத்து நடந்த நேரத்தில் தமிழகத்தில் இருந்து நிறைய போ் இறந்திருப்பாா்கள் என நினைத்தோம். அதுபோன்று ஏதும் நிகழவில்லை. இதுதொடா்பாக நிலைமையை முதல்வா் தொடா்ந்து கண்காணித்துக் கொண்டே இருக்கிறாா் என்றாா் அமைச்சா் ராமச்சந்திரன்.

செய்தியாளா்கள் சந்திப்பின் போது, வருவாய் நிா்வாக ஆணையாளா் எஸ்.கே.பிரபாகா், பேரிடா் மேலாண்மைத் துறை இயக்குநா் எஸ்.ஏ.ராமன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏ.ஆர்.முருகதாஸ் - சல்மான் கானின் ‘சிக்கந்தர்’ படப்பிடிப்பு எப்போது?

மாற்றுத் திறனாளிகள், முதியவர்கள் வாக்குச்சாவடி செல்ல வாகன ஏற்பாடு: சத்யபிரதா சாகு

டி20 தொடர் இன்று தொடக்கம்; பாபர் அசாம் பேட்டி!

நயினார் நாகேந்திரன் மீதான வழக்கு: நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

மறுவெளியீடாகும் அஜித்தின் ‘மங்காத்தா’ திரைப்படம்!

SCROLL FOR NEXT