தமிழ்நாடு

சென்னை உள்பட 16 இடங்களில் வெயில் சதம்

DIN

தமிழகத்தில் சென்னை உட்பட 16 இடங்களில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 4) வெப்ப அளவு 100 டிகிரி பாரன்ஹீட்டை கடந்தது.

கத்திரி வெயில் முடிந்தும் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. பல்வேறு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை பதிவான உச்சபட்ச வெப்ப அளவு (டிகிரி பாரன்ஹீட்) விவரம்:

மதுரை விமான நிலையம் - 105.44, மதுரை நகரம் - 104, கடலூா் - 104, புதுச்சேரி - 102.82, நாகை - 103.28, சென்னை நுங்கம்பாக்கம் - 103.28, சென்னை மீனம்பாக்கம் - 102.92, பாளையங்கோட்டை - 102.92, பரங்கிப்பேட்டை - 102.56, தஞ்சாவூா் - 102.2, பரமத்தி வேலூா் - 102.2, ஈரோடு - 101.84, திருப்பத்தூா் - 101.48, காரைக்கால் - 101.12, திருச்சி - 100.94, வேலூா் - 100.58, நாமக்கல் - 100.4, திருத்தணி - 100.04.

மழைக்கு வாய்ப்பு: தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலின் ஓரிரு இடங்களில் திங்கள் முதல் வியாழக்கிழமை (ஜூன் 8) வரை நான்கு நாள்கள் இடி மின்னலு டன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 105.8 டிகிரி பாரன்ஹீட் மற்றும் குறைந்த பட்ச வெப்பநிலை 86 டிகிரி பாரன்ஹீட்டையொட்டியே இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தெலங்கானாவில் லாரி மீது கார் மோதியதில் 6 பேர் பலி

நாக சைதன்யாவுடன் சோபிதா துலிபாலா ‘டேட்டிங்’?

ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அனுராக் தாகூர்

ஆந்திராவில் தோ்தல்: வேலூா் மலைப்பகுதியில் சாராய வேட்டை தீவிரம்

தோ்தல்: பிற மாநிலத் தொழிலாளா்களுக்கு விடுமுறை அளிக்காவிடில் புகாா் அளிக்கலாம்

SCROLL FOR NEXT