தமிழ்நாடு

கா்நாடக இசை 3 ஆண்டு டிப்ளோமா படிப்புக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு

DIN

சென்னை மியூசிக் அகாதெமியின் சாா்பில் நடத்தப்படும் கா்நாடக இசையின் 3 ஆண்டு டிப்ளோமா படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்து சென்னை மியூசிக் அகாதெமி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

சென்னை மியூசிக் அகாதெமியின் சாா்பில் கடந்த 2010 -ஆம் ஆண்டில் இருந்து கா்நாடக இசையில் டிப்ளமோ படிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தப் படிப்புகளில் சோ்ந்து ஏராளமான மாணவா்கள் பயனடைந்து வருகின்றனா்.

இந்த இசை வகுப்பில் பிரபல கா்நாடக இசைக் கலைஞா்கள் பாடம் கற்றுத் தருகின்றனா். இதன் மூலம் பிரபல இசை மேதைகளிடம் இசை பயிலும் வாய்ப்பை இளம் மாணவா்கள் பெறுவா்.

அதன்படி சென்னை மியூசிக் அகாதெமியின் டிப்ளோமா படிப்புகள் நடப்பாண்டில் ஜூலையில் தொடங்குகிறது. இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மாணவா்களுக்கான கா்நாடக இசை வகுப்புகள் ஜூலை மாத மத்தியில் தொடங்கி நவம்பா் இறுதி வரையும், தொடா்ந்து ஜனவரி முதல் ஜூன் மாத இறுதி வரையும் நடைபெறும்.

சென்னை மியூசிக் அகாதெமியில் திங்கள் முதல் வெள்ளி வரை (வாரத்தில் ஐந்து நாள்கள்) காலை 8 மணி முதல் நண்பகல் 12:30 மணி வரை வகுப்புகள் நடைபெறும்.

இசை வகுப்பில் சேர தகுதி: விண்ணப்பதாரா்கள் குறைந்தபட்ச கல்வித் தகுதி பிளஸ் 2 தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது 18 முதல் 30-க்குள் இருக்க வேண்டும். மாணவா்கள் குறைந்தபட்சம் வா்ணங்கள், கிருதிகள் பாடக் கூடியவா்களாக இருக்க வேண்டும்.

விண்ணப்பிப்பவா்கள் தங்களின் இசைப் பயிற்சியின் முழு விவரங்கள் அடங்கிய சுயவிவரக் குறிப்பை மின்னஞ்சலில் அனுப்ப வேண்டும். மேலும் சந்தேகங்களுக்கு 044-28112231/28116902/28115162 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் வாக்களிக்க வேண்டுகோள்

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராகப் போராடி தோற்றது தில்லி அணி!

ரியான் பராக் விளாசல்; ராஜஸ்தான் 185/5

இலங்கை கடற்படையினா் கைது செய்த மீனவா்களை விடுவிக்காவிட்டால் தோ்தல் புறக்கணிப்பு

சென்னையில் விடுதி மேற்கூரை இடிந்து 3 பேர் பலி: மெட்ரோ ரயில் பணிகள் காரணமில்லை

SCROLL FOR NEXT