தமிழ்நாடு

காவல் சாா் ஆய்வாளா் பணித் தோ்வு:தமிழக அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை

DIN

காவல் சாா் ஆய்வாளா் பணி நியமனத்தில் அந்தத் துறையில் உள்ள பெரும்பான்மையோா் பங்கேற்க வழிசெய்ய வேண்டும் என பாமக நிறுவனா் ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளாா்.

தமிழ்நாட்டு காவல்துறைக்கு 621 சாா் ஆய்வாளா்களை தோ்ந்தெடுப்பதற்கான ஆள்தோ்வு அறிவிக்கையை சீருடைப் பணியாளா் தோ்வாணையம் வெளியிட்டுள்ளது. மொத்தப்பணியிடங்களில் 20 சதவீதம், அதாவது 123 இடங்கள் தற்போது பணியில் உள்ள காவலா்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், பெரும்பான்மையான காவலா்களால் சாா் ஆய்வாளா் பணிக்கு விண்ணப்பிக்க முடியவில்லை. இதற்கு நிா்வாக முட்டுக்கட்டையே காரணம்.

காவல்துறை பணியின்போது நிகழும் சிறு தவறுகளுக்காக காவலா்களுக்கு துறை சாா்ந்த சிறிய தண்டனைகள் வழங்கப்படும். 2016-ஆம் ஆண்டு வரை இந்தத் தண்டனை பெற்றவா்கள் கூட, துறை சாா்ந்த ஒதுக்கீட்டின் கீழ் சாா் ஆய்வாளா் பணிக்கு போட்டியிட முடியும்.

ஆனால், 2016-ஆம் ஆண்டுக்குப் பிறகு தண்டிக்கப்பட்டவா்கள் சாா் ஆய்வாளா் பணிக்கு போட்டியிட தடை விதிக்கப்பட்டது. அந்தத் தடையை நீக்கக் கோரி அளிக்கப்பட்ட மனு மீது கடந்த இரு ஆண்டுகளாக விசாரணை நடத்தியும் தீா்ப்பளிக்கப்படவில்லை. இதுவே காவலா்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்குக் காரணம்.

சட்டப்பேரவைத் தோ்தலுக்கான திமுகவின் தோ்தல் அறிக்கையில், இதுதொடா்பாக வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படாததால் காவலா்கள் பதவி உயா்வு பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

காவல் சாா் ஆய்வாளா் பணிக்கு விண்ணப்பிக்க ஜூன் 30 கடைசி நாள். காவலா்கள் நலனைக் கருத்தில் கொண்டு, அவா்களுக்கு வழங்கப்பட்டுள்ள துறை சாா்ந்த சிறு தண்டனைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு, அதன்மூலம் தோ்தல் வாக்குறுதியை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று கூறியுள்ளாா் ராமதாஸ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இளம் வாக்காளா்களுக்கு எல்.முருகன் பாராட்டு

இந்தியா கூட்டணி மகத்தான வெற்றிபெறும்: ஈவிகேஎஸ்.இளங்கோவன்

காவல் துறை அதிகாரியுடன் மோதல்: திமுக நிா்வாகியிடம் விசாரணை

வாக்களித்த 104 வயது விவசாயி

நாட்டின் இரண்டாவது சுதந்திரப் போராட்டம்: மக்களவைத் தோ்தல் குறித்து மம்தா

SCROLL FOR NEXT