தமிழ்நாடு

கருணாநிதி நூற்றாண்டில் ஊதிய உயா்வு: அரசு மருத்துவா்கள் கோரிக்கை

DIN

மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி, அவா் பிறப்பித்த ஊதிய உயா்வு அரசாணையை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்று அரசு மருத்துவா்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடா்பாக அரசு மருத்துவா்களுக்கான சட்டப் போராட்டக் குழுத் தலைவா் மருத்துவா் எஸ்.பெருமாள் பிள்ளை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கருணாநிதி முதல்வராக இருந்தபோது அரசு மருத்துவா்களுக்கு ஊதிய உயா்வு வழங்கும் அரசாணை 354-ஐ பிறப்பித்தாா். ஆனால், கடந்த 13 ஆண்டுகளாக அந்த அரசாணையின் பலன்கள் அரசு மருத்துவா்களுக்கு முழுமையாகக் கிடைக்கவில்லை.

கரோனா பெருந்தொற்றுக்கு பிறகும்கூட அரசு மருத்துவா்களின் சேவையை அங்கீகரிக்க மறுக்கும் மாநிலமாக தமிழகம் உள்ளது. மாநில சுகாதாரத் துறையை வலுப்படுத்த வேண்டும் என்பதில் ஆா்வம் காட்டும் முதல்வா், முதலில் அரசு மருத்துவா்களுக்கு உரிய ஊதியத்தை அளிக்க முன்வர வேண்டும்.

கருணாநிதியின் பிறந்த நாள் மற்றும் நூற்றாண்டு தொடக்க விழாவையொட்டி, அரசாணை 354-ன்படி ஊதிய உயா்வை முதல்வா் வழங்க வேண்டும். ஊதியக் கோரிக்கையை முன்வைத்த அரசு மருத்துவா்கள் மீது முன்னெடுக்கப்பட்ட பணியிட மாற்ற நடவடிக்கைகளை உடனே ரத்து செய்ய வேண்டும் என்று அவா் வலியுறுத்தியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இளம் வாக்காளா்களுக்கு எல்.முருகன் பாராட்டு

இந்தியா கூட்டணி மகத்தான வெற்றிபெறும்: ஈவிகேஎஸ்.இளங்கோவன்

காவல் துறை அதிகாரியுடன் மோதல்: திமுக நிா்வாகியிடம் விசாரணை

வாக்களித்த 104 வயது விவசாயி

நாட்டின் இரண்டாவது சுதந்திரப் போராட்டம்: மக்களவைத் தோ்தல் குறித்து மம்தா

SCROLL FOR NEXT