தமிழ்நாடு

தமிழகம், புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

5th Jun 2023 02:43 PM

ADVERTISEMENT


தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

இதுகுறித்து வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட அறிக்கையில், 

மேற்கு திசை காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக, 

ஜூன் 5 முதல் ஜூன் 9 வரை தமிழ்நாடு மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

ADVERTISEMENT

அதிகபட்ச வெப்பநிலை

ஜூன் 5, ஜூன் 06யில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி முதல் 42 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். ஓரிரு இடங்களில் இயல்பிலிருந்து 2 - 4 டிகிரி செல்சியஸ் இருக்கக்கூடும். 

சென்னையை பொருத்தவரை..

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 40-41 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும். 

மீனவர்களுக்கு..

ஜூன் 5, ஜூன் 6 குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா பகுதிகள் தென் தமிழக கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ வேகத்திலும் இடையிடையே 65 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். 

அந்தமான் கடல் பகுதிகள், தெற்கு வங்கக்கடல் பகுதிகள், மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் இலங்கை கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 கி.மீ வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். 

இந்த நாள்களில் மீனவர்கள் கடலுக்குள் செல்லவேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள். 

ADVERTISEMENT
ADVERTISEMENT