தமிழ்நாடு

சென்னை புறநகர் பகுதிகளில் திடீர் கன மழை: மக்கள் மகிழ்ச்சி!

5th Jun 2023 03:50 PM

ADVERTISEMENT

 

சென்னையில் கோடை வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் திடீரென பெய்த கனமழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

மேற்கு திசை காற்று மற்றும் வெப்பச் சலனத்தின் காரணமாக கனமழை பெய்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

சென்னை புறநகர் பகுதிகளான பூந்தமல்லி, வண்டலூர், சிங்கபெருமாள் கோயில், சைதாப்பேட்டை, வடபழனி, அசோக் நகர், கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகின்றது. 

ADVERTISEMENT

படிக்க: ஒடிசா: சவக்கிடங்கில் மகனை உயிரோடு கண்டுபிடித்த தந்தையின் பாசப்போராட்டம்

சென்னை நகர்ப் பகுதி முழுவதும் பெய்து வரும் மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.

இந்த கனமழை அடுத்த மூன்று மணி நேரத்திற்கு செங்கல்பட்டு, நாகை உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களில் நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 40-41 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும். 

படிக்க: திரையுலகை மீண்டும் ஆளப்போகும் த்ரிஷா!

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT