தமிழ்நாடு

மீண்டும் சேவையை தொடங்கியது கோரமண்டல் எக்ஸ்பிரஸ்!

5th Jun 2023 11:16 AM

ADVERTISEMENT

ரயில் விபத்து காரணமாக ரத்து செய்யப்பட்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் இன்று சென்னையிலிருந்து புறப்பட்டுச் சென்றது.

ஒடிசா மாநிலம் பாலசோர் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு கோரமண்டல் விரைவு ரயில், சரக்கு ரயில் மற்றும் பெங்களூரு-ஹெளரா ரயில் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின. இதில், சுமார் 275 பேர் பலியாகினர். 1,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

சுமார் மூன்று நாள்களாக மீட்புப் பணிகள் நடைபெற்ற நிலையில், பாலசோரில் ரயில் விபத்து நிகழ்ந்த பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு சுமாா் 10.40 மணியளவில் மீண்டும் ரயில் போக்குவரத்து தொடங்கியது. முதல் ரயிலாக ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து ஒடிஸாவில் உள்ள ரூா்கேலா இரும்பு ஆலையை நோக்கி நிலக்கரி ஏற்றுக்கொண்டு சரக்கு ரயில் சென்றது.

இதனைத் தொடர்ந்து, விபத்து நடந்த பகுதிகளில் பயணிகள் ரயில்கள் மெதுவாக இயக்கப்பட்டு வருகின்றன.

ADVERTISEMENT

இந்நிலையில், சென்னையிலிருந்து ஷாலிமாருக்கு வழக்கமாக காலை 7 மணிக்கு புறப்படும் கோரமண்டல் விரைவு ரயில் இன்று 3.45 மணிநேரம் தாமதமாக காலை 10.45 மணிக்கு புறப்பட்டுச் சென்றது.

மேலும், ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்திதினர், உறவினர்கள் செல்ல சென்னை சென்ட்ரலில் இருந்து ஒடிசா புவனேஸ்வருக்கு இன்று இரவு 7.20 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. சிறப்பு ரயிலில் செல்ல விரும்புவோர் சென்ட்ரலில் உள்ள உதவி மையத்தை தொடர்பு கொள்ளலாம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT