தமிழ்நாடு

ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப பள்ளிக்கல்வித்துறைக்கு அதிமுக வலியுறுத்தல்

5th Jun 2023 06:58 PM

ADVERTISEMENT

 

சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை விரைவில் நிரப்ப வேண்டும் என்று தமிழக பள்ளிக் கல்வித்துறைக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக முன்னாள் முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில் 12,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும், மாநிலத்தில் லட்சக்கணக்கான தகுதிவாய்ந்த ஆசிரியர்கள் பணி நியமனத்திற்காக காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 1,000-க்கும் மேற்பட்ட தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக பல ஆசிரியர் அமைப்புகள் தெரிவித்துள்ளன.

ADVERTISEMENT

ஒவ்வொரு வகுப்பிலும் 35 முதல் 40 மாணவர்களுக்கு பதிலாக, 60 மாணவர்கள் உள்ளனர். ஊழியர்கள் பற்றாக்குறையால் ஒரு வகுப்பில் அதிக மாணவர் எண்ணிக்கை காரணமாக, ஆசிரியர்களால் வகுப்புகளை சரியாக கட்டுப்படுத்த முடியவில்லை என்றும், கற்பித்தலின் தரம் பாதிக்கப்படுவதாகவும் பழனிசாமி தெரிவித்தார்.

அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் பொதுத் தேர்வு எழுதாதது குறித்து ஆராய திமுக அரசால் அமைக்கப்பட்ட குழுவின் நிலை என்ன என்று அவர் கேள்வி எழுப்பினார். 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் சுமார் 50,000 பேர் பொதுத் தேர்வுகளை எழுதவில்லை.

குழந்தைகளின் படிப்பு மற்றும் எதிர்காலம் குறித்து பெற்றோர்கள் கவலையில் இருப்பதால், ஏராளமான ஆசிரியர் காலிப்பணியிடங்கள் பிரச்னைக்கு தீர்வு காண, தி.மு.க., அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT